Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.வி.எஸ் மோட்டார் ஏற்றுமதி இரு மடங்காக உயர்வு

Webdunia
திங்கள், 1 டிசம்பர் 2008 (15:44 IST)
சென்ன ை: இரண்டு சக்கர வாகனங்கள் உற்பத்தியில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான, டி.வி.எஸ் மோட்டார் நிறுவனத்தின் ஏற்றுமதி நவம்பர் மாதம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

இந்த நிறுவனம், நவம்பர் மாதத்தில் 20,911 இரு சக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது.

இது சென்ற வருடம் நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இரண்டு மடங்காகும்,

( சென்ற வருடம் நவம்பரில் 10,408 இரு சக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்திருந்தத ு)

இந்த நிதி ஆண்டில் ஏப்ரல் முதன் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்துள்ளது. இந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரை ஏற்றுமதி 54 விழுக்காடு அதிகரித்துள்ளது.

ஆனால் உள்நாட்டில் விற்பனை குறைந்துள்ளது. நவம்பர் மாதத்தில் 98,402 இரண்டு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது சென்ற நவம்பருடன் ஒப்பிடுகையில் குறைவு.

( சென்ற வருடம் நவம்பரில் 1,12,766 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்திருந்தத ு).

இதில் 45,276 மோட்டார் பைக் விற்பனை செய்துள்ளது. (சென்ற நவம்பர் 57,113).

இந்தியாவில் பொதுவாக உள்ள நெருக்கடி, வட்டி உயர்வு, கடன் கிடைப்பதில் தட்டுப்பாடு போன்ற காரணங்களால், டி.வி.எஸ் நிறுவனம் உட்பட எல்லா நிறுவனங்களின் வாகன விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

Show comments