Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம்- காங். கோரிக்கை

Webdunia
திங்கள், 1 டிசம்பர் 2008 (09:48 IST)
கோவ ை: தமிழகத்தில் நிலவும் மின்பற்றாக்குறையைப் போக்க மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

மத்திய நிதி அமைச்சருக்க ு, கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஏ.ஆர்.சின்னையன் அனுப்பியுள்ள வேண்டுகோளில் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் அவர், தமிழக பஞ்சாலைகள ் பல்வேறு நெருக்கடி காரணமாக வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில ் உள்ளன. எனவே, அசல் மற்றும் தவணைத் தொகையைத் திருப்பிச் செலுத்த 2 ஆண்டுகள் அவகாசம் கொடுக்க வேண்டும்.

அதோடு சர்க்கரை ஆலைகளுக்கு வட்டியைக் குறைப்பதைப் போ ல, நூற்பாலைகளுக்கும் வட்டியைக் குறைக்க வேண்டும்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் பெட்ரோல ், டீசல் விலையை குறைந்தபட்சம் லிட்டருக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை குறைக்க வேண்டும்.

அதேபோல வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை, சிலிண்டருக்கு ரூ.50 குறைக்க வேண்டும். சமையல் எரிவாயு சிலிண்டர் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னர் ரவியை விஜய் சந்தித்தது ஏன்? அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்..!

நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை! தந்தைக்கு 2 ஆண்டுகள் சிறை..!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 4 அறைகள் தரைமட்டம்: 6 பேர் பரிதாப பலி..!

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

Show comments