Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏற்றுமதி சலுகை கடன் நீடிப்பு

Webdunia
திங்கள், 1 டிசம்பர் 2008 (11:44 IST)
பொருளாதார வளர்ச்சி பாதிக்காமல் இருக்க ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இதன் படி, ஏற்றுமதியாளர்கள், சரக்குகளை அனுப்பியதற்கு பிறகு, அந்த சரக்கு மதிப்பில் குறிப்பிட்ட விழுக்காடு சலுகை வட்டியில் கடனாக வழங்கப்படுகின்றன. இந்த கடன் முன்பு சலுகை வட்டியில் மூன்று மாதங்கள் (90 நாட்கள ்) வரை வழங்கப்பட்டது. இது தற்போது 6 மாதங்களாக (180 நாட்கள ்) வரை நீடிக்கப்பட்டு உள்ளது.

இத்துடன் வங்கிகள். அவற்றின் மொத்த வைப்புத் தொகையில் 1 விழுக்காடு வரை சிறப்பு கடன் அளிக்கும் திட்டத்தின் கீழ் மேலும் 90 நாட்கள் வரை (2009-ஜீன் 30 வர ை) கடன் பெறலாம்.

வங்கிகள் வீட்டு வசதி கடன், மியூச்சுவல் பண்ட், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் போன்றவைகளுக்கு கடன் வழங்கும் வகையில், ரிசர்வ் வங்கியிடம் இருந்து குறுகிய கால கடன் பெற (ரிபோ) ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு உள்ளது. வங்கிகளிடம் உள்ள கடன் பத்திரங்களில் 1.5 விழுக்காடு வரை ரிசர்வ் வங்கியில் அடமான வைத்து கடன் பெற அனுமதிக்கப்பட்டு உள்ளன. இதற்கான காலக்கெடு அடுத்த வருடம் ஜீன் 30 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது.

அயல் நாடுகளில் உள்ள இந்தியாவைச் சேர்ந்த வங்கிகளின் கிளைகள், அவற்றின் அந்நியச் செலவாணி தேவைக்கு ரிசர்வ் வங்கியிடம் அந்நியச் செலவாணி பெறுகின்றன. இவை மூன்று மாதகாலத்திற்கு வழங்கப்படுகின்றன. இவ்வாறு அந்நியச் செலவாணி வழங்குவது 2009-ஜீன் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதியாளர்கள், சரக்குகளை அனுப்பியதற்கு பிறகு, அந்த சரக்கு மதிப்பில் குறிப்பிட்ட விழுக்காடு சலுகை வட்டியில் கடனாக வழங்கப்படுகின்றன. இந்த கடன் முன்பு சலுகை வட்டியில் மூன்று மாதங்கள் (90 நாட்கள ்) வரை வழங்கப்பட்டது. இது தற்போது 6 மாதங்களாக (180 நாட்கள ்) வரை நீடிக்கப்பட்டு உள்ளது. என வெள்ளிக் கிழமை ரிசர்வ் வங்கி அறிவித்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

Show comments