Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிருகண்டா அணை நிரம்பியது

Webdunia
சனி, 29 நவம்பர் 2008 (18:54 IST)
கடந்த ஒரு வாரமாக பெய்த பலத்த மழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மிருகண்டா அணை நிரம்பியுள்ளது. மற்ற அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம். ராஜேந்திரன், தானிப்பாடி அருகேயுள்ள சாத்தனூர் அணையை மாவட்ட வருவாய் அலுவலர் கோ. தாமர ை, வருவாய் கோட்டாட்சியர் பி. அர்ச்சுணன் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை பார்வையிட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சாத்தனூர் அணை நீர்மட்டம் தற்போது 115 அடியாக உள்ளது. செண்பகத்தோப்ப ு, குப்பநத்தம் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் 60 விழுக்காடு ஏரிகள் நிரம்பியுள்ளன. சாலைகள், விவசாயிகள் பயிர் செய்துள்ள வாழை மரங்கள் போளூர் பகுதியில ், வசூர ், படவேடு உள்ளிட்ட பகுதிகளில் சேதம் அடைந்துள்ளன என்று தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments