நபார்டு வங்கிக் கடன் திட்ட அறிக்கை வெளியீடு

Webdunia
சனி, 29 நவம்பர் 2008 (18:59 IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2009-10 ஆம் ஆண்டுக்கு ரூ.1487.13 கோடி கடன் வழங்குவதற்கு சாத்தியக் கூறுகள் உள்ளதாக நாபர்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவிலில் மாவட்ட வங்கி அலுவலர்கள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் நபார்டு அடுத்த ஆண்டுக்கான வங்கிக் கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது.

இதை மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரகுமார் வெளியிட்டார். முதல் பிரதியை முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதுநிலை மண்டல மேலாளர் என். சுவாமிநாதன் பெற்றுக் கொண்டார்.

நபார்டு வங்கியின் உதவிப் பொது மேலாளர் இரா. சங்கர் திட்ட அறிக்கை பற்றி விளக்கினார்.

இதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் 2009-10 ஆம் ஆண்டுக்கு ரூ.1487.13 கோடி கடன் வழங்குவதற்கு சாத்தியக் கூறுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறுகிய காலக் கடன் ரூ.291.75 கோடி, முதலீட்டு விவசாயக் கடன் ரூ.288.45 கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பண்ணை சாராத் தொழிலுக்கு ரூ.176.15 கோடி, இதர முன்னுரிமை கடன்களுக்கு ரூ.725.55 கோடி, உணவுப் பொருள் பதப்படுத்தலுக்கு ரூ.5.22 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நில மற்றும் நீர்வளம ், வேளாண் இயந்திரங்கள ், தோட்டப் பயிர ், மருத்துவப் பயிர ், வன மேம்பாட ு, ஆட ு, மாட ு, கோழ ி, மீன் வளர்ப்பு என 16 பகுதிகளாக திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் சுய உதவிக் குழுக்கள ், மகளிர் திட்டம ், மாவட்ட தொழில் மையம் மற்றும் ஏனைய அரசு சார் நிறுவனங்களின் பணிகள் பற்றிய திட்டங்களும் விளக்கப்பட்டுள்ளன.

இந்த திட்ட அறிக்கையின் அடிப்படையில், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வங்கிகள், கடன் வழங்குவது பற்றிய திட்டங்களை தயாரிக்கும்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர் சக்திவேல ், மகளிர் திட்ட அலுவலர் தெய்வநாயக ி, முன்னோடி வங்கி மேலாளர் சந்திரசேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தம்பி விஜய் எனக்கு எதிரி இல்லை!... திடீர் டிவிஸ்ட் கொடுத்த சீமான்...

கிரீன்லாந்தை கைப்பற்ற நினைத்தால் விபரீதம் ஏற்படும்.. ட்ரம்ப்க்கு டென்மார்க் எச்சரிக்கை...

ஜனவரியில் நல்ல மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

திமுக கூட்டணிக்கு செல்கிறதா தேமுதிக? இரட்டை இலக்கங்களில் தொகுதிகள்?

மோடியால் பாஜகவுக்கு ஆபத்து.. பகீர் கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமி!

Show comments