Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாப் நேஷனல் வங்கி வட்டி குறைப்பு.

Webdunia
வியாழன், 27 நவம்பர் 2008 (13:04 IST)
புது டெல்ல ி: இந்தியாவின் மூன்றாவது பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி, கடனுக்கான வட்டியை 1 விழுக்காடு குறைப்பதாக அறிவித்துள்ளது.

இந்த வட்டி குறைப்பு டிசம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.

இதனால் வாகனம், வீட்டு கடன் உட்பட மற்ற கடன்களுக்கான வட்டி குறையும்.

இனி கடனுக்கு 12.5% வட்டி வசூலிக்கப்படும்.

இதனால் பொதுத்துறை வங்கிகளிலேயே, பஞ்சாப் நேஷனல் வங்கி குறைந்த அளவு வட்டியை வசூலிக்கும் வங்கியாக மாறியுள்ளது.

இதை தொடர்ந்து மற்ற பொதுத்துறை, தனியார் துறை வங்கிகளும் வட்டியை குறைக்கும் என்று தெரிகிறது.

இதே போல் 1 முதல் 3 வருடங்களுக்கான வைப்பு நிதி வட்டியையும் 1 விழுக்காடு குறைத்துள்ளது.

முன்பு வைப்பு நிதிக்கு 10.5 விழுக்காடு வட்டி கொடுக்கப்பட்டது. இனி இது 9.5 விழுக்காடு வட்டி வழங்கப்படும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments