Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 லட்சம் ஹெக்டேர் பயிர் சேதம்.

Webdunia
வியாழன், 27 நவம்பர் 2008 (12:41 IST)
தஞ்ச ை: தமிழகத்தில் பெய்து வரும் மழையால் 2 லட்சத்திற்கும் அதிகமான பரப்பில் உள்ள நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி பாசன பகுதிகளில் 2 லட்சத்து 6 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் பயிரிடப்பட்டு இருந்த தாளடி, சம்பா நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

தஞ்சை, கும்பகோனம், திருவையாறு, திருவிடைமருதூர், ஒரத்தநாடு ஆகிய தாலுகாக்களில் உள்ள நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

தஞ்சை மாவட்டத்தில் மட்டும் சுமார் 47 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.சண்முகம் தெரிவித்தார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 74,200 ஹெக்டேர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன என்று மாவட்ட ஆட்சியர் ஜெயராமன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், தென் புத்தாறு, வடக்கு புத்தாறு, முடிகொண்டான் ஆறு ஆகியவைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றன என்று தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் அந்த சார்? பதில் சொல்... சட்டசபை அருகே அதிமுக எம்.எல்.ஏக்கள் கோஷம்..!

வெளியேறியது ஏன்? நீக்கப்பட்ட விளக்கம் மீண்டும் வெளியீடு.. ராஜ்பவன் பதிவு வைரல்..

பேரவை நிகழ்வுகள் நேரலையை துண்டித்துவிட்ட ஸ்டாலின் மாடல் அரசு! அதிமுக கண்டனம்..!

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

Show comments