Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உணவு தரத்தை உயர்த்த நடவடிக்கை

Webdunia
புதன், 26 நவம்பர் 2008 (16:33 IST)
புது டெல்ல ி: தெருவோர உணவ ு கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் தரத்தை மேம்படுத்தும், நடவடிக்கைகளை மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்களுக்கான அமைச்சகம் 11வது ஐந்தாண்டு திட்டத்தில் எடுத்துள்ளது.

அதே நேரத்தில் இந்த அமைச்சகம் உணவுப் பொருட்களை தெருவோர கடைகளில் விற்கும் வியாபாரிகளின் நலனையும் பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளது.

பாதுகாப்பான உணவுப் பொருட்களை அளிப்பதற்கு இதற்கான நகரங்களை உருவாக்குவத ு, தெரு கடைகளில் உணவுப் பொருட்களை சிறந்த முறையில் விற்பனை செய்வதற்கான சிறப்பு முயற்சிகளை மேற்கொள்வது ஆகிய இரண்டு திட்டங்களை இந்த அமைச்சகம் உருவாக்கியுள்ளது.

இந்த திட்டத்தின்படி தெருவோர கடைகளில் உணவுப் பொருட்களை விற்பவர்களில் 1,000 பேரை சில நகரங்களில் இருந்து தெரிந்தெடுத்து அவர்களுக்கு பயிற்சி மற்றும் நிதியுதவி ஆகியவை அளிக்கப்படுகின்றன.

அவர்கள் உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல வண்டி மற்றும் காப்பீட்டு தொகை ஆகியவையும் வழங்கப்படுகின்றன. இந்த நிதி ஆண்டில் இந்த திட்டம் ஆக்ர ா, தில்லி உட்பட 9 நகரங்களில் செயல்பட உள்ளது.

இந்த திட்டத்தில், தற்போதுள்ள உணவு விற்பனை செய்யும் கடைகளை மேம்படுத்தி கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தும் வகையில் செயல்படுகிறது. அத்துடன் மின் வசதி மற்றும் நவீன மின்சார இயந்திர கருவிகளை வழங்குவத ு, பாதுகாப்பான குடிநீர் அளிப்பது ஆகியவை இத்திட்டத்தில் அடங்கும்.

தற்போது செயல்படுத்த திருப்பத ி, வாரணாசி ஆகிய இரு நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டடுள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்க சட்டமன்றத்தில் பேசுவோம்.. உங்கள மாதிரி பட்டிமன்றத்தில் அல்ல! - சீமானுக்கு தவெக கொடுத்த அதிரடி பதில்!

காசாவை வாங்கவில்லை.. எடுத்துக்கப்போறோம்! ஒழுங்கா சொல்றதை செய்யணும்! - ஹமாஸ்க்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

அரசுப்பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் பெருகிவருவது ஏன் திரு. ஸ்டாலின்? வானதி சீனிவாசன் கேள்வி

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா? உச்சநீதிமன்றம் கேள்வி..!

அரசு பள்ளி சுவர் இடிந்ததால் பரபரப்பு.. மூன்று மாணவர்கள் படுகாயம்..!

Show comments