Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலக்கரி உற்பத்தி 37 மில்லியன் டன்.

Webdunia
புதன், 26 நவம்பர் 2008 (15:29 IST)
புது டெல்ல ி: இந்த அக்டோபர் மாதம் இந்திய நிலக்கரி நிறுவனம ், சிங்கரேனி நிலக்கரி தொழிற்சாலை ஆகியவை 37.31 மில்லியன் டன் (1 மில்லியன் 10 லட்சம்) நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளன.

இவைகளுக்கு 37.71 மில்லியன் டன் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

இந்த இரண்டு நிறுவனங்கள் இணைந்து 2007 ஆம் ஆண்டு அக்டோபரில் 34.05 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்தன. இந்த அக்டோபர் மாதம், சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்தை விட 9.57 விழுக்காடு உற்பத்தி உயர்ந்ததுள்ளது.

மின் உற்பத்திக்காக அக்டோபர் மாதத்தில் 27.77 மில்லியன் டன் நிலக்கரி, மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டது.

இந்த நிதி ஆண்டில் இந்திய நிலக்கரி நிறுவனம ், சிங்கரேனி நிலக்கரி நிறுவனம ், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் ஆகியவற்றுக்காக ரூ.6597 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சென்ற மாதம் வரை ரூ.1806.64 கோடி செலவிடப்பட்டுள்ளது.

இந்திய நிலக்கரி நிறுவனம் சென்ற மாதம் முதல் நிலக்கரியை மின்னணு முறையில் ஏலம் விடும் முறையை துவக்கியது. இந்த முறையில் சுமார் 32.26 லட்சம் டன் நிலக்கரி ஏலம் விடப்பட்டது. ஆயினும் நிலக்கரி பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு சுமார் 40.1 லட்சம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது.

நிலக்கரியைப் பயன்படுத்தி சென்ற மாதம் 1171.1 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இதற்கான இலக்கு 1075 மில்லியன் யூனிட் ஆகும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்க சட்டமன்றத்தில் பேசுவோம்.. உங்கள மாதிரி பட்டிமன்றத்தில் அல்ல! - சீமானுக்கு தவெக கொடுத்த அதிரடி பதில்!

காசாவை வாங்கவில்லை.. எடுத்துக்கப்போறோம்! ஒழுங்கா சொல்றதை செய்யணும்! - ஹமாஸ்க்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

அரசுப்பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் பெருகிவருவது ஏன் திரு. ஸ்டாலின்? வானதி சீனிவாசன் கேள்வி

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா? உச்சநீதிமன்றம் கேள்வி..!

அரசு பள்ளி சுவர் இடிந்ததால் பரபரப்பு.. மூன்று மாணவர்கள் படுகாயம்..!

Show comments