Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மஞ்சள் விலை உயர்வு!

Webdunia
புதன், 19 நவம்பர் 2008 (16:41 IST)
பிரபல பண்டக சந்தை கணிப்பு நிறுவனமான ஷேர்கான் காமோடிட்டி ( ) நிறுவனத்தின் கணிப்புகளை கீழே கொடுத்துளோம்.

▄ மலேசியாவில் இருந்து நவம்பர் 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை 6,49,071 டன் பாமாயில் ஏற்றுமதி ஆகி உள்ளது. இது முந்தைய மாதத்தை விட 18 விழுக்காடு அதிகம்.

▄ மகாராஷ்டிராவில் நான்கு மாநிலங்களில் விவசாயிகளிடம் இருந்து மக்காச் சோளம் கொள்முதல் செய்வது துவங்கி உள்ளது. ஆனால் இதன் விலை அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலையை விட குறைந்துள்ளன.

▄ உஞ்சா மொத்த விற்பனை சந்தையில் சீரகம் விலை அதிகரித்துள்ளன. இதற்கு காரணம் முன்பேர சந்தையில் சீரகம் விலை அதிகரித்ததே. இங்கு 20 கிலோ கொண்ட சீரக மூட்டையின் விலை ரூ.1,960 முதல் ரூ.1,920 வரை இருந்தது.

▄ சீரகம் 6 லட்சம் மூட்டை வரை இருப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

▄ சீரகம் விதைப்பு தொடங்கியுள்ளது. இதறகு தகுந்தார் போல் பருவநிலையும் சாதகமாக உள்ளன. இதே மாதிரி பருவநிலை சாதகமாக இருந்தால் 28 லட்சம் மூட்டை வரை உற்பத்தியாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த வருடத்தைவிட 10 விழுக்காடு அதிகம்.

▄ தற்போது ஏற்றுமதி குறைந்துள்ளது. அடுத்த வரும் மாதங்களில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். அந்த சமயத்தில் விற்பனை உயர வாய்ப்பு உள்ளது.

▄ அதே நேரத்தில் பருவநிலையை பொறுத்து சீரகத்தின் விலை அடிக்கடி மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனினும் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், ஏற்றுமதி குறையும். அதே நேரத்தில் உற்பத்தி அதிகரிப்பதால் விலைகள் குறைய வாய்ப்பு உள்ளது.

. ▄ மஞ்சளுக்கு உள்நாட்டு சந்தையில் அதிக தேவை இருப்பதாலும், அந்நிய நாடுகளின் இறக்குமதியாளர்களிடம் இருந்து தகவல்கள் வந்துள்ளதால், இதன் விலை அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த சில வாரங்களாக மஞ்சள் விலை அதிகரித்து வருகிறது. தற்போது 1 குவினடால் விலை ரூ.3,800 ஆக அதிகரித்துள்ளது. முன்பு இதன் விலை ரூ.3 ஆயிரம் வரை குறைந்தது. மஞ்சள் விலை குவின்டால் 4,000 வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

▄ எனினும் புதிதாக விளைச்சலான மஞ்சளின் வரத்தை பொறுத்து, இதன் விலை குறைய வாய்ப்பு உள்ளது.

▄ மஞ்சள் சாகுபடி முடிந்து விட்டது. புதிய மஞ்சள் ஜனவரி-பிப்ரவரியில் விற்பனைக்கு வரும். இந்த வருடம் 48 லட்சம் மூட்டை விளைச்சல் இருக்கும் என்று வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர். இது சென்ற வருடத்தை விட 10 விழுக்காடு அதிகம்
▄ மிளகாய் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் மூட்டை வரை விற்பனைக்கு வந்தது. மத்திய பிரதேசத்தில் விளைச்சல் குறைவாக இருப்பதாகவும், ஆந்திராவில் குறைந்த பரப்பளவில் மிளகாய் சாகுபடி செய்திருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

▄ இதனால் மிளகாய் விலை இதுவரை குறையாமல் உள்ளது. அதே நேரத்தில ் மிளகாய் எவ்வளவு உற்பத்தியாகும் என்ற இறுதி மதிப்பீடு கணக்கிடப் படவில்லை. தற்போதைய பொருளாதார நெருக்கடியால், மிளகாய் ஏற்றுமதி பாதிக்க வாய்ப்பு உள்ளது.

▄ ஆந்திராவில் இருந்து புதிய மிளகாய் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் சந்தையில் விற்பனைக்கு வரும். மத்திய பிரதேசத்தில் விளைச்சலான மிளகாய் சந்தைக்கு விற்பனைக்கு வந்து விட்டது. இதன் தரம் நன்றாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

▄ கடந்த சில நாட்களில் ஆமணக்கு விதை விலை 5 முதல் 6 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் இருப்பு குறைவாக உள்ளதுடன், முன்பேர சந்தையில் ஒப்பந்தம் முடிவடைந்ததே. இந்த விலை உயர்வு தற்காலிகமானது தான்.

▄ புதிதாக சாகுபடி செய்யப்பட்டுள்ள ஆமணக்கு பயிர்கள் நன்றாக இருக்கின்றன. இவை அறுவடையாகி அடுத்த மாத வாக்கில் சந்தையில் விற்பனைக்கு வர துவங்கும். குஜராத் மாநிலத்தில் சாகுபடி செய்துள்ள ஆமணக்கு ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் விற்பனைக்கு வரும்.

▄ சென்ற வருடத்தை விட, இந்த ஆண்டு 10 விழுக்காடு பரப்பளவில் கூடுதலாக ஆமணக்கு விதைப்பு நடைபெற்றுள்ளது. மொத்தம் 8,61,000 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இநத வருடம் 10.5 லட்சம் டன் உற்பத்தி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

▄ இதன் விலை எதிர்காலத்தில் குறைய வாய்ப்பு உள்ளது. ஏனெனில் தற்போது ரொக்க சந்தையில் 20 கிலோ மூட்டையின் விலை ரூ.600 ஆக உள்ளது. அதே நேரத்தில் முன்பேர சந்தையில் பிப்ரவரி மாதத்திற்கான விலை ரூ.475 ஆக உள்ளது. மற்ற நாடுகளில் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஆமணக்கு ஏற்றுமதி நின்று போய் விட்டது.

▄ இந்தியாவில் இருந்து வருடத்திற்கு சீனா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு 2 லட்சம் டன் ஆமணக்கு எண்ணெய் (விளக்கெண்ணெய்) ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த வருடம் ஏற்றுமதி 40 ஆயிரம் டன்னாக குறைந்து விட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

Show comments