Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட்டியை குறைக்க வேண்டும்-ராகுல் பஜாஜ்.

Webdunia
புதன், 19 நவம்பர் 2008 (11:46 IST)
புது டெல்லி: பொது மக்களுக்கு தேவையான பொருட்களை வாங்க, வங்கி கடனுக்கான வட்டியை குறைக்க வேண்டும் என்று பிரபல தொழில் அதிபரும், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சேர்மனுமான ராகுல் பஜாஜ் கூறியுள்ளார்.

புதுடெல்லியில் இந்திய தொழில் கூட்டமைப்பும் ( CII), உலக பொருளாதார அமைப்பும் ( World Economic Forum) இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்திய பொருளாதார மாநாட்டை நடந்து வருகிறது.

இதில் நேற்று முன்தினம் ராகுல் பஜாஜ் பேசும் போது, மத்திய அரசு பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுப்பதை விட, வளர்ச்சிக்கு உதவும் கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும்.

பொருளாதாரத்தின் தேக்க நிலையை மாற்ற மத்திய அரசு உற்பத்தி வரியை குறைக்க வேண்டும். இதனால் பொருட்களின் விலை குறையும். பொருட்களின் விலை குறைவதால், இவற்றின் விற்பனை அதிகரிக்கும் என்று ராகுல் பஜாஜ் கூறியிருந்தார்.

இந்த மாநாட்டில் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உரையாற்றும் போது, வாகன உற்பத்தியாளர்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், விமான போக்குவரத்து நிறுவனங்கள் போன்றவை விலை, கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த ஆலோசனையை ஏற்றுக் கொள்ள மறுத்த ராகுல் பஜாஜ், இரண்டு சக்கர வாகனங்களின் விலையை குறைப்பதால், இதனால் சந்தையில் விலை குறைப்பு போட்டியே நடைபெறும். இதை விட அரசு சாதாரண மக்கள் பயன்படுத்தும் பொருட்களை வாங்குவதற்கு வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டியை குறைக்க வேண்டும்.

இரண்டு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களின் விற்பனையை அதிகப்படுத்த விலையை குறைப்பது தீர்வாகாது. இதனால் ஆரோக்கியமற்ற போட்டிதான் ஏற்படும். இரண்டு சக்கர வாகனங்களின் விற்பனை வளர்ச்சி இரண்டு இலக்கத்தில் இருந்து, தற்போது ஒரு இலக்கமாக குறைந்துள்ளது.

வாகனங்களை வாங்குபவர்களுக்கு கடன் கிடைத்த காரணத்தினால், வாகன உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதை வங்கிகள் அறியும். இது பற்றி பல முறை எடுத்து கூறப்பட்டுள்ளது. இவை செவிடன் காதில் ஊதிய சங்காக தான் போனது.

வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு என்பதை விட, வங்கி கடன் வாகனங்களை வாங்கும் சாதாரண மக்களுக்கு தேவை. ஆனால் வங்கிகள் இரண்டு சக்கர வாகனங்களை வாங்குபவர்களின் கடன் தேவையை புறக்கணித்து விட்டன. வங்கிகள் வீட்டு வசதி கடனுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தன.

இரண்டு சக்கர வாகனம் வாங்க விரும்பும் சாதாரண மக்களுக்கு கடன் கிடைப்பதை உறுதி செய்யும் படி நான், நிதி அமைச்சர், தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள், ரிசர்வ் வங்கி கவர்னர் ஆகியோர்களை கேட்டுக் கொள்கின்றேன்.

அதுமட்டுமல்லாமல் உற்பத்தி வரியை குறைப்பதால் மட்டும் வாகன உற்பத்தி உட்பட எந்த தொழில் துறையின் பிரச்சனைகளையும் தீர்த்து விடாது.

வாகன உற்பத்்தியாளர்கள் ஐந்து விழுக்காடு இலாபத்திலேயே தொழிலை நடத்துகின்றனர. இந்நிலையில் விலையை குறைப்பது மிக சிரமானது என்று ராகுல் பஜாஜ் கூறினார்.

மாநிலங்களவை உறுப்பினராக உள்ள ராகுல் பஜாஜ், இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் மற்றவர்கள் போல் அல்லாமல், தான் நினைப்பதை வெளிப்படையாக கூற கூடியவர் என்பது அனைவரும் அறிந்ததே.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

Show comments