Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயத்திற்கு வரி-ஐ.எம்.எப்.

Webdunia
திங்கள், 17 நவம்பர் 2008 (18:07 IST)
இஸ்லாமாபாத ்: வருவாயை அதிகரிக்க, விவசாயத்திற்கு வரி விதிக்கும் படி சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்) பாகிஸ்தான் அரசிடம் கூறியுள்ளது.

பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இது அந்நிய நாடுகளுக்கு கொடுக்க வேண்டிய கடன், இறக்குமதிக்கு செலுத்த வேண்டிய அந்நிய செலவாணி இல்லாமல் திண்டாடிக் கொண்டுள்ளது.

பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள, சர்வதேச நிதியத்திடம் இருந்து கடனை எதிர்பார்க்கிறது. சர்வதேச நிதியம் 7.6 பில்லியன் டாலர் கடன் கொடுப்பது பற்றி பரிசீலிக்க உள்ளது. இதற்காக சர்வதேச நிதியத்தின் இயக்குநர்கள் குழு கூட்டம் வாஷிங்டனில் வருகின்ற வெள்ளிக் கிழமை நடைபெறுகிறது.

இதில் கடன் வழங்குவதற்கு அனுமதி கிடைத்தால், கடன் தொகை இந்த மாத இறுதியில் இருந்து கிடைக்கும் என்று பாகிஸ்தான் எதிர்பார்க்கிறது. சர்வதேச நிதியம் 45 நாட்களுக்குள் நான்கு பில்லியன் டாலர் டாலர் வழங்கும். மீதம் உள்ள தொகை அடுத்த வருடம் வழங்கும்.

சர்வதேச நிதியத்தில் இருந்து கடன் பெற வேண்டுமெனில், பாகிஸ்தான் வட்டி விகிதத்தை இரண்டு விழுக்காடு அதிகரிக்க வேண்டும். இதை ஏற்றுக் கொண்டு பாகிஸ்தான் கடந்த வாரம் வட்டியை அதிகரித்துள்ளது. கடந்த பத்து வருடங்களில் இல்லாத அளவிற்கு வட்டி அதிகரித்துள்ளது.

தற்போதைய வட்டி உயர்வு மட்டும் போதாது. இதை விட கடுமாயான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச நிதியம் வற்புறுத்தி வருகிறது. இதில் முக்கியமாக விவசாய விளை பொருட்கள் மீது வரி விதிக்கும் படி கூறுகிறது.

பாகிஸ்தான் பிரதமரின் பொ ருளாதார ஆலோசகர் சருகத் தாரின் சென்ற மாதம் வாஷிங்டன் சென்று இருந்தார். அப்போது அவர் சர்வதேச நிதியத்திடம், பொருளாதாரத்தை வலுப்படுத்த, விவசாயம் உட்பட எல்லா துறைகள் மீதும் வரி போட உள்ளதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

ஆனால் இதற்கு முன்பும் பாகிஸ்தான் விவசாயத்தின் மீது விரி விதிப்பதாக உறுதி அளித்தது. பிறகு இந்த வாக்குறுதியில் இருந்து பின் வாங்கி விட்டது என்று ஒரு பொருளாதார நிபுணர் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறும் போது, சர்வதேச நிதியம் தற்போது பாகிஸ்தானை எச்சரித்துள்ளது. இதனால் இந்த முறை பாகிஸ்தான் வாக்குறுதியை மீற முடியாது. இந்த தடவை பாகிஸ்தான் விவசாயத்தின் மீது வரியை போடாவிட்டால், இதுவே சர்வதேச நிதியத்திடம் இருந்து பெறும் கடைசி கடனாக இருக்கும்.

இத்துடன் சர்வதேச நிதியம் மற்ற இனங்கள் மீதும் வரி விதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. இதனை நிறைவேற்றும் வகையில், பாகிஸ்தான் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தும் என்று கூறினார்.

சர்வதேச நிதியம் ரியல் எஸ்டேட் மதிப்பு உயர்வு, பங்குச் சந்தை இலாபம், முதலீட்டு இலாபம் போன்றவைகள் மீதும் வரி விதிக்கும் படி வற்புறுத்தி வருகிறது.

சர்வதேச நிதியத்தின் இந்த யோசனைகள் ஏற்கப்பட்டால், அடுத்த ஆண்டில் இருந்து புதிய வரிகள் விதிக்கப்படும்.

சரிவதேச நிதியம் அரசு செலவினங்களை குறைப்பதுடன், குறிப்பிட்ட அளவு வருவாய் அதிகரிக்கும் படியாக செயல்படும் படி கூறி வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள எதிர்க்கட்சிகள், சர்வதேச நிதியத்திடம் இருந்து கடன் வாங்குதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது வரை சர்வதேச நிதியத்தின் நிபந்தனைகள் அறிவிக்கப் படவில்லை. இதை எதிர்ப்பவர்கள் சர்வதேச நிதியம் எப்போதும் பொருளாதார வளர்ச்சியை தடுக்கும் வகையில், அதிக அளவு கடுமையான நிபந்தனைகளை விதிப்பதாக குறை கூறி வருகின்றனர்.

இதற்கு பதிலளிக்கும் வகையில். சர்வதேச நிதியத்தைச் சேர்ந்த அதிகாரிகள், இந்த மாதிரியான சந்தேகம் தேவையற்றது. பாகிஸ்தானுக்கு வழங்க போகும் கடனால், அதன் வளர்ச்சி பாதிக்கப்படாது. அத்துடன் ஏழைகள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறுகின்றனர்.

இநத தகவல் பாகிஸ்தானின் முன்னணி செய்தி பத்திரிக்கையான டானில் வெளியிடப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments