Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிபோ வட்டி விகிதம் குறையும் - டன் & பிரட்ஸ்டீரிட்டின் கணிப்பு!

Webdunia
சனி, 15 நவம்பர் 2008 (17:23 IST)
இந்தியாவின் தொழில் துறை உற்பத்தி, வங்கி வட்டி போன்ற பொருளாதார அம்சங்கள் நவம்பர் மாதத்தில் எப்படி இருக்கும் என்று பிரபல ஆய்வு நிறுவனமான டன் & பிரட்ஸ்டீரிட்டின் ஆய்வு நிறுவனம் கணிப்பு வெளியிட்டுள்ளது.

இதன் தலைமை அலுவலர் கெளஷல் சம்பத் கூறுகையில், தற்போது ஏற்றுமதி குறைந்திருப்பது, உள்நாட்டில் விற்பனை குறைந்திருப்பது, அத்துடன் கடன் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு போன்றவைகளால் தொழில் துறை உற்பத்தி குறையும். எனவே இந்த நிதி ஆண்டில் மீதம் உள்ள மாதங்களில் தொழில் துறை உற்பத்தி 5.1 விழுக்காடாக இருக்கும்.

பணப்புழக்கம் குறைவாக இருப்பதை கணக்கில் கொண்டால் ரிசர்வ் வங்கி, வங்கிகளின் இருப்பு விகிதம், ரிபோ விகிதத்தை அரை விழுக்காடு வரை குறைக்க வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

இந்த நிறுவனத்தில் விளக்காமான ஆய்வு வருமாறு :

இந்தியாவின் தொழில் துறை, இந்த நிதி ஆண்டின் முதல் ஆறு மாத்தில் சராரியாக 4.9 விழுக்காடாக உள்ளது. சென்ற வருடம் இதே காலகட்டத்தில் இந்தியாவின் தொழில் துறை உற்பத்தி சராசரியாக 9.49% ஆக இருந்தது.

இதனுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் தொழில்துறை உற்பத்தி குறைந்துள்ளது. இதற்கு காரணம் வங்கிகளின் வட்டி உயர்வு, எரி பொருளின் விலை அதிகரித்ததே.

இதனால் உற்பத்திக்கு பயன்படுத்தும் மூலப் பொருட்களின் விலை அதிகரித்தது. இத்துடன் உள்நாட்டில் விற்பனையும் குறைந்தது. மற்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறைந்தால், ஏற்றுமதியும் குறைந்து விட்டது.

இது போன்ற காரணங்களால் தொழில் துறை உற்பத்தி குறைந்தது. தற்போதைய நிலையில் அக்டோபர் மாதத்திய தொழில் துறை உற்பத்தி 2.5 முதல் 3.5% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலக சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெயின் விலை குறைந்து வருகிறது. இதனால் அரசின் விலை கட்டுப்பாட்டில் இல்லாத விமான பெட்ரோல், நாப்தா, எரி எண்ணெய் ஆகியவற்றின் விலை குறைந்துள்ளது. பணவீக்கம் கணக்கிடும் மொத்த விலை குறியீட்டு எண் அட்டவணையில், இதன் பங்கு குறையும்.

இதனால் அக்டோபரில் பணவீக்கம் குறையும். செப்டம்பர் மாதத்தில் பணவீக்கம் 6.02% ஆக இருந்தது. இது அக்டோபரில் 4.43% ஆக குறையும். அத்துடன் சென்ற வாரம் வெளியிடப்பட்ட நவம்பர் 1 ஆம் தேதியுடன் முடிவடைந்த பணவீக்கம் பற்றிய புள்ளி விபரத்தில் எரிசக்தியின் பங்கு 3.4% ஆக குறைந்துள்ளது. எனவே நவம்பர் மாதத்தில் பணவீக்கம் 8.80 முதல் 9.10% ஆக இருக்கும்.

ரிசர்வ் வங்கி சமீபத்தில் எடுத்த நடவடிக்கைகளால் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. கால் ரேட் எனப்படும் வங்கிகளுக்கு இடையேயான ஒரு நாள் கடனுக்கான வட்டி விகிதம் தற்சமயம் குறைந்துள்ளது. பங்குச் சந்தையில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்து வருகின்றன. அத்துடன் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது.

இதை தடுக்க ரிசர்வ் வங்கி அந்நியச் செலவாணி சந்தையில் டாலரை தொடர்ந்து விற்பனை செய்கிறது. இதனால் அடுத்து வரும் வாரங்களில் பணப்புழக்கம் மீண்டும் நெருக்கடிக்கு உள்ளாகலாம்.

இதனை கருத்தில் கொண்டு ரிசரவ் வங்கி வங்கிகளின் இருப்பு விகிதம், ரிசர்வ் வங்கி, மற்ற வங்கிகளுக்கு கொடுக்கும் கடனுக்கான (ரிப ோ) வட்டி ஆகியவை அரை விழுக்காடு வரை குறைக்க வாய்ப்புள்ளது. இதனால் குறுகிய கால கடனுக்கான வட்டி குறையும்.

எனவே நவம்பர் மாதத்தில் 15 முதல் 91 நாட்களுக்கான கடன் பத்திரத்தின் வருவாய் 6.8 முதல் 7% என்ற அளவில் இருக்கும்.

உலக நிதி சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் முதலீடுகளை திரும்ப பெறுவது ஆகிய காரணங்களால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அக்டோபர் 27 ஆம் தேதிக்குள் 6.7% குறைந்துள்ளது.

நவம்பர் முதல் வாரத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்ததாலும், ஏற்றுமதியாளர்கள் டாலரை விற்பனை செய்ததால் ரூபாயின் மதிப்பு அதிக அளவு சரியவில்லை.

நவம்பர் 11 ஆம் தேதி நிலவரப்படி 1 டாலரின் மதிப்பு ரூ.47.59 ஆக இருந்தது. இது அக்டோபர் 27 ஆம் தேதி இருந்த விலையுடன் ஒப்பிடுகையில் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.2.50 அதிகரித்துள்ளது.

பங்குச் சந்தையில் நிலவும் நிச்சயமற்ற நிலை, அந்நிய முதலீடு வெளியேறுவது போன்ற காரணங்களினால் நவம்பர் மாதத்தில் 1 டாலரின் மதிப்பு ரூ.48 முதல் ரூ.48.40 என்ற அளவில் இருக்கும்.

டன் & பிரட்ஸ்டீரிட்டின் பொருளாதார கணிப்ப ு :

எதிர்கால மதிப்பீடு
சமீபத்தியது
கடந்த மாதம்
பணவீக்கம்
8.80%-9.10 (நவ-08)
10.98 10.98% (அக்-08)
12.02%-(செப்-08)
தொழில்துறை உற்பத்தி
2.50%-3.50 (அக்-08)
4.80% (செப்-08)
.42%-(ஆகஸ்ட்-08)
15-91 நாள் கடன் பத்திரம்
6.8%-7.0 (நவ-08)
7.52% (அக்-08)
8.62%-(செப்-08)
1 டாலரின் விலை

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

Show comments