Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்சாரத்தில் ஓடும் ஸ்கூட்டர்!

Webdunia
வெள்ளி, 14 நவம்பர் 2008 (16:08 IST)
சென்ன ை: பெட்ரோல் செலவு இல்லாமல், மின்சக்தியில் ஓடும் ஸ்கூட்டரை முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த பி.எஸ்.ஏ மோட்டார் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்திய அளவில் புகழ் பெற்ற தொழில் நிறுவனம் முருகப்பா குழுமம். இதன் சைக்கிள்கள் உலகப் புகழ் பெற்றவை. அத்துடன் இந்த குழுமம் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளது.

முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த டியூப் இன்வெஸ்ட்மென்ட் ஆப் இந்தியாவின் துணை நிறுவனம் பி.எஸ்.ஏ மோட்டார்ஸ்.

இதன் தொழிற்சாலை அம்பத்தூருக்கு அருகே அமைந்துள்ளது. இதில் மின்சார பேட்டரியில் இயங்கும் ஸ்கூட்டர் தயாரிக்கப்படுகின்றன. இது இ-ஸ்கூட்டர் என்று அழைக்கப்படுகிறது.

இந்த இ-ஸ்கூட்டரின் அறிமுகவிழா சென்ற 10 ஆம் தேதி சென்னையில் நடந்தது.

இந்த விழாவில் முருகப்பா குழுமத்தின் சேர்மன் எம்.ஏ.அழகப்பன் ஐந்து ரக இ-ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தினார்.

“சுமைல ் ” என்று பெயரிடப்பட்டுள்ள இ-ஸ்கூட்டரை 13 முதல் 18 வயது உள்ளவர்களுக்கானது. இது 250 வாட்ஸ் சக்தியில் இயங்க கூடியது. அதிகபட்சமாக மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும். இதை ஓட்ட ஓட்டுநர் உரிமம், பதிவு எண் தேவையில்லை.

“திவ்ய ா ” என்ற ரக இ-ஸ்கூட்டர் 16 முதல் 20 வயது வரை உள்ளவர்கள் ஓட்டலாம். . இது 250 வாட்ஸ் சக்தியில் இயங்க கூடியது. அதிகபட்சமாக மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும். இதை ஓட்ட ஓட்டுநர் உரிமம், பதிவு எண் தேவையில்லை.

இதே போல் “ஸ்டீர்ட் ரைடர ் ” என்ற ரக இ-ஸ்கூட்டர் இளைஞர்கள் ஓட்டலாம். இதுவும் 250 வாட்ஸ் சக்தியில் இயங்க கூடியது. அதிகபட்சமாக மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும். இதை ஓட்ட ஓட்டுநர் உரிமம், பதிவு எண் தேவையில்லை.

“ரோமர ்” ரக இ-ஸ்கூட்டர் 500 வாட்ஸ் சக்தியில் இயங்கக்கூடியது. அதிகபட்சமாக மணிக்கு 40 கி.மீ வேகத்தில் ஓடும். இதற்கு ஓட்டுநர் உரிமம், பதிவு எண் தேவை.

குடும்பத்துடன் செல்வதற்கு ஏற்ற வகையில் “ரோமர் ப்ளஸ ் ” ரக இ-ஸ்கூட்டர் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இது மணிக்கு அதிகபட்சமாக 45 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும். இதுவும் 500 வாட்ஸ் சக்தியில் இயங்க கூடியது. இதற்கு ஓட்டுநர் உரிமம், பதிவு எண் தேவை.

இதன் அறிமுக விழாவில் டியூப் இன்ஸ்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் சேர்மன் எம்.எம்.முருகப்பன் பேசும் போது, நாங்கள் தற்போது சைக்கிள்களை உற்த்தி செய்து கொண்டுள்ளோம். இதன் தொடர்ச்சி தான் மின்சார சக்தியில் இயங்கும் இரண்டு சக்கர வாகனம். தற்போது ரூ.450 கோடி அளவிற்கு, இ-ஸ்கூட்டர்கள் விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது. இது அடுத்த வருட வாக்கில் இரண்டு மடங்காக உயரும். தற்போது பி.எஸ்.ஏ நிறுவனம் சார்பில் அறிமுகப்படுத்தியுள்ள இ-ஸ்கூட்டர், எங்கள் நிறுவனத்தின் அடுத்த வெற்ளிகராமான அறிமுகம் என்பதில் சந்தேகமில்லை என்று கூறினார்.

இந்த நிறுவனத்தின் அம்பத்தூர் தொழிற்சாலையில் இ-ஸ்கூட்டர்களை இணைத்து, வர்ணம் அடிப்பது, சோதனை செய்வது போன்ற பணிகள் நடைபெறும். இதற்கு தேவையான மோட்டார், பேட்டரி, சக்கரம், விளக்கு, டயர்கள், டீயூப்புகள் போன்றவை, இத்துறையில் உள்ள முன்னணி நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்படும். அம்பத்தூர் தொழிற்சாலையில் இ-ஸ்கூட்டர்களை நவீன முறையில் பரிசோதிக்கும் வசதி உள்ளது.

இந்த இ-ஸ்கூட்டர்கள் சாலையில் ஓட்டுவதற்கு தகுதியானவை என்று ஆட்டோமேடிவ் ரிசர்ச் அசோசிசன் ஆப் இந்தியா [ Automotive Research Association of India (ARAI)] சான்றிதழ் அளித்துள்ளது. இதன் பேட்டரிகளை தினசரி பாரமரிக்க தேவையில்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆளுநர் வெளியேற்றத்திற்கு இதுதான் காரணமா? ஓபிஎஸ் கூறிய வித்தியாசமான தகவல்..!

இன்று ஒரே நாளில் 1,258 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்திட மறுப்பு.. சிறையில் அடைக்கப்பட்ட பிரசாந்த் கிஷோர்..!

கர்நாடகா, குஜராத்தை அடுத்து சென்னையிலும் HMPV வைரஸ்.. 2 குழந்தைகளுக்கு பாதிப்பு..!

ஞானசேகரனின் சொத்து பட்டியல் வேண்டும்: பத்திர பதிவுத்துறைக்கு நோட்டீஸ்..!

Show comments