Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இணையதளம் மூலம் விற்பனை விபரம் சமர்ப்பிக்கும் வசதி!

Webdunia
வெள்ளி, 14 நவம்பர் 2008 (13:35 IST)
கோவ ை : கோவை கோட்டத்தில் உள்ள அனைத்து வியாபாரிகளும், இணையம் மூலமாக விற்பனை விவரங்களை சமர்பிக்க வணிக வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழகத்தில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மதிப்புக் கூட்டு வரிச் சட்டம் (வாட்) அமலில் உள்ளது. வியாபாரிகள், அவர்களது விற்பனை தொடர்பான விவரங்களை, ஒவ்வொரு மாதமும் 20 ஆம் தேதிக்குள் வரிவிதிப்பு அலுவலகங்களில் சமர்ப்பித்து வருகின்றனர்.

வணிகவரித் துறையை கணினிமயமாக்கும் முயற்சியின் பயனாக, தேர்வு செய்யப்பட்ட வியாபாரிகள் மட்டுமே இணையதளம் மூலமாக விற்பனை விவரங்களைச் சமர்ப்பிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

கோவை கோட்டத்தில் உள்ள அனைத்து வியாபாரிகளும் இணையதளம் மூலம் விற்பனை விபரங்களை சமர்ப்பிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இணையதள வசதி இல்லாத வியாபாரிகள் வணிக வரி அலுவலகத்தில் அமைந்துள்ள கணினி மையத்தில் வாயிலாக விற்பனை விபரங்களை இணையதளம் மூலம் சமர்ப்பிப்பதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது என்று வணிகவரி இணை ஆணையர்கள் பு.ஏகாம்பரம ், ஆஷிஷ்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments