Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணவீக்கம் 8.98 % ஆக குறைந்தது!

Webdunia
வியாழன், 13 நவம்பர் 2008 (15:54 IST)
புது டெல்ல ி: பணவீக்கம் ஒற்றை இலக்கமாக குறைந்தது.

கடந்த ஆறு மாதத்தில் இல்லாத அளவு நவம்பர் 1 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 8.98 விழுக்காடாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த மே மாதத்தில் பணவீக்கம் 8.90% ஆக இருந்தது. அதற்கு பின் அதிகரித்து அதிகபட்சமாக ஆகஸ்ட் முதல் வாரத்தில் 12.91% ஆக அதிகரித்தது.

இதற்கு முந்தைய வாரத்தில் பணவீக்கம் 10.72% ஆக இருந்தது.

பணவீக்கம் கணக்கிடப்பட்ட நவம்பர் 1 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பார்லி விலை 4 %, சோளம், துவரம் பருப்பு, முட்டை, இறைச்சி விலை தலா 2% அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில் கம்பு, தேயிலை விலை தலா 2%, உளுந்து, கொத்தமல்லி, மற்ற மசாலா பொருட்களின் விலை 1% குறைந்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் விலை 8%, தவிட்டு எண்ணெய் விலை 6%, பருத்தி எண்ணெய், நல்லெண்ணெய், பிண்ணாக்கு விலை தலா 3%, சுத்திகரிக்கப்படாத சமையல் எண்ணெய் விலை 1% குறைந்துள்ளது.

வெல்லம் விலை 6%¸ கால்நடை தீவனம் விலை 1% அதிகரித்துள்ளது.

இயற்கை ரப்பர், ஆமணக்கு விதை விலை தலா 2%, நிலக்கடலை, எள் விலை 1% குறைந்துள்ளது.

உரம், மின் உற்பத்தி நிறுவனங்கள் பயன்படுத்தும் நாப்தா விலை 33%, விமான பெட்ரோல் விலை 18%, எரி எண்ணெய் 13%, இலகு ரக டீசல் விலை 6% குறைந்துள்ளது. அதே நேரத்தில் தார் விலை 2% அதிகரித்துள்ளது.

தேனிரும்பு விலை 12%, இரும்பு சட்டம், ஆங்கிள் போன்றவை 6%, இரும்பு கம்பி 4%, தகடு 3%, மற்ற
உருக்கு மற்றும் இரும்பு பொருட்களின் விலை 1% குறைந்துள்ளது.

பால் பேரிங் விலை 3% அதிகரித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்க சட்டமன்றத்தில் பேசுவோம்.. உங்கள மாதிரி பட்டிமன்றத்தில் அல்ல! - சீமானுக்கு தவெக கொடுத்த அதிரடி பதில்!

காசாவை வாங்கவில்லை.. எடுத்துக்கப்போறோம்! ஒழுங்கா சொல்றதை செய்யணும்! - ஹமாஸ்க்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

அரசுப்பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் பெருகிவருவது ஏன் திரு. ஸ்டாலின்? வானதி சீனிவாசன் கேள்வி

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா? உச்சநீதிமன்றம் கேள்வி..!

அரசு பள்ளி சுவர் இடிந்ததால் பரபரப்பு.. மூன்று மாணவர்கள் படுகாயம்..!

Show comments