Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொழில் துறை உற்பத்தி பாதிப்பு!

Webdunia
சனி, 8 நவம்பர் 2008 (13:05 IST)
புது டெல்ல ி: தொழில் வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும் அடிப்படை தொழில்களின் வளர்ச்சி குறைந்துள்ளது.

பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தி, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு, நிலக்கரி, மின் உற்பத்தி, சிமென்ட், உருக்கு உற்பத்தி ஆகிய முக்கியமான ஆறு தொழில் துறைகளின் உற்பத்தி குறைந்துள்ளது.

இந்த தொழில் துறையின ் வளர்ச்சி, இந்த நிதி ஆண்டில் முதல் 6 மாதங்களில் (ஏப்ரல்-செப்டம்பர்) 3.9 விழுக்காடாக குறைந்துள்ளது

இவற்றின் வளச்சி சென்ற நிதி ஆண்டில் முதல் 6 மாதங்களில் 6.9 விழுக்காடாக இருந்தது.

இத்துடன் செப்டம்பர் மாதத்தில் இவற்றின் வளர்ச்சி 5.1 விழுக்காடாக உள்ளது. (சென்ற ஆண்டு செப்டம்பர் 5.8%).

இந்த தொழில் துறையின் வளர்ச்சி ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், செப்டம்பரில் அதிகரித்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் வளர்ச்சி 2.3%.

இந்தியாவின் தொழில் துறை வளர்ச்சியை கணக்கிடும் அட்டவணையில், இந்த 6 தொழில் துறைக்கு 26.7% மதிப்பு உள்ளது.

அடுத்த வாரத்தில் மத்திய அரசு, செப்டம்பர் மாதத்திற்கான தொழில் துறை வளர்ச்சி பற்றிய அதிகாரபூர்வ புள்ளி விபரத்தை வெளியிட உள்ளது.

இதில் பெட்ரோலிய சுத்திகரிப்பு வளர்ச்சி 2.8% ஆக குறைந்துள்ளது. (சென்ற ஆண்டு செப்டம்பர் 6.9%).

உருக்கு உற்பத்தி 5.8% ஆக குறைந்துள்ளது. (சென்ற ஆண்டு செப்டம்பர் 9.5%).

ஆனால் செப்டம்பரில் நிலக்கரி உற்பத்தி 10.7% ஆக அதிகரித்துள்ளது. (சென்ற ஆண்டு செப்டம்பர் 6.3%).

அதே போல் சிமென்ட் உற்பத்தியும் 7.9% ஆக அதிகரித்துள்ளது. (சென்ற ஆண்டு செப்டம்பர் 5.4%).

மின் உற்பத்தி 4.4% ஆக அதிகரித்துள்ளது. (சென்ற ஆண்டு செப்டம்பர் 4.3%).
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னர் ரவியை விஜய் சந்தித்தது ஏன்? அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்..!

நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை! தந்தைக்கு 2 ஆண்டுகள் சிறை..!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 4 அறைகள் தரைமட்டம்: 6 பேர் பரிதாப பலி..!

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

Show comments