Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொருளாதார வளர்ச்சி குறையும்-ஐ.எம்.எப்.

Webdunia
வெள்ளி, 7 நவம்பர் 2008 (12:41 IST)
வாஷிங்டன ்: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3 விழுக்காடாக குறையும் என்று சர்வதேச நிதியம் அறிவித்துள்ளது.

ஐ.எம்.எப் என்று அழைக்கப்படும் சர்வதேச நிதியம், நேற்று உலக அளவில் பொருளாதார வளர்ச்சி பற்றிய அறிக்கையை வெளியிட்டது.

இதில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டு 6.3% ஆக இருக்கும் என்று அறிவித்துள்ளது.

இது சென்ற மாதம் சர்வதேச நிதியம் வெளியிட்ட பொருளாதார வளர்ச்சி அளவை விட 0.6% குறைவு.

இந்தியாவில் மட்டுமல்லாது, உலக அளவில் அடுத்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி குறையும் என்று சர்வதேச நிதியம் அறிவித்துள்ளது.

உலக அளவில் பொருளாதார வளர்ச்சி 2.2% ஆக இருக்கும். இது முந்தைய கணிப்பை விட 0.8% குறைவு.


பல்வேறு நாடுகளுக்கு இடையே நடக்கும் ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகம், சேவை துறைகளின் வளர்ச்சி 4.6% ஆக குறையும் என்று அறிவித்துள்ளது.

இது முன்பு அறிவித்த அளவை விட 2.1% குறைவு.

ஏற்கனவே சர்வதேச நிதியம் ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகம், சேவை துறைகளின் வளர்ச்சி 7.2% ஆக இருக்கும் என்று அறிவித்து இருந்தது.

சர்வதேச நிதியத்தின் மதிப்பீட்டின் படி, 2002 ஆம் ஆண்டில் உலக அளவில் பொருளாதார வளர்ச்சி 5% இருந்தது. இது இந்த ஆண்டு 3.37 விழுக்காடாக குறையும்.

அதே நேரத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 0.1%, குறைந்து, 7.8% ஆக இருக்கும்.

இந்த வருடம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்று மாதங்களில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% இருக்கும். (சென்ற ஆண்டு அக்டோபர்-டிசம்பர் 8.9%).

இந்தியா போன்ற பொருளாதார வளர்ச்சி அடைந்துவரும் நாடுகளின் வளர்ச்சி சராசரியாக 1% குறையும்.

உலக அளவில் கச்சா எண்ணெயின் தேவையை மதிப்பிட்டுள்ள, சர்வதேச நிதியம், இதன் விலை அடுத்த ஆண்டு பீப்பாய் 68 டாலராக இருக்கும் என்று கூறியுள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், ஜப்பான் போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சியும் குறையும். இதில் பிரிட்டன் அதிக அளவு பாதிக்கப்படும் என்று ஐ.எம.எப் கூறியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

Show comments