Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் விலை குறைக்கப்படாது: மத்திய அரசு!

Webdunia
வெள்ளி, 7 நவம்பர் 2008 (05:17 IST)
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து குறைந்துள்ள் போதிலும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை குறைக்கும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.

இதுதொடர்பாக பெட்ரோலியத் துறை செயலாளர் ஆர்.எஸ். பாண்டே புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மண்ணெண்ணெய், டீசல், எல்பிஜி விற்பனையால் நஷ்டம் நீடிப்பதாகக் கூறினார்.

தற்போதைய சூழ்நிலையில் பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் குறைப்பது பற்றி பரிசீலிக்கவில்லை என்றார் அவர்.

பெட்ரோல் விற்பனை மூலம் கிடைக்கும் தொகையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், மற்றவை தொடர்ந்து நஷ்டத்திலேயே விற்பனை செய்யப்படுவதாகக் கூறினார்.

ரூபாய்க்கு நிகரான டாலர் மதிப்பு, கச்சா எண்ணெயின் விலையும் தினந்தோறும் மாறிக் கொண்டே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

Show comments