Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்நிய நேரடி முதலீடு 259% உயர்வு!

Webdunia
புதன், 5 நவம்பர் 2008 (16:04 IST)
புது டெல்ல ி: உலகில் பல நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, பணப்புழக்கம், கடன், முதலீடு குறைந்துள்ள சூழ்நிலையில், இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அந்நிய நேரடி முதலீடு 2.56 பில்லியன் டாலர் வந்துள்ளது.

இது சென்ற வருடம் செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 259 விழுக்காடு அதிகம். (சென்ற செப்டம்பரில் வந்த அந்நிய நேரடி முதலீடு 713 மில்லியன் டாலர்).

இந்த நிதி ஆண்டில் முதல் ஆறு மாதங்களான ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மொத்தம் 17.21 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளது.

சென்ற நிதி ஆண்டில் இதே ஆறு மாதத்துடன் ஒப்பிடுகையில், 137 விழுக்காடு அதிகம்.

( சென்ற வருடம் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 7.25 பில்லியன் டாலர்)

இந்த நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அந்நிய நேரடி முதலீடு பெற்றதில், சேவை துறையில் உள்ள நிறுவனங்கள் முதல் இடத்தில் உள்ளன.

இந்த பிரிவு 2.34 பில்லியன் டாலர் பெற்றுள்ளது

இதை தொடர்ந்து சாலைகளை போடும் பிரிவு உட்பட கட்டுமானத் துறை 1.64 பில்லியன் டாலர், வீட்டு வசதி மற்றும் ரியல் எஸ்டேட் பிரிவு 1.62 பில்லியன் டாலர், கணினி, மென் பொருள் துறை சார்ந்த பிரிவு 1.36 பில்லியன் டாலர் பெற்றுள்ளன.

மொரிஷியசில் இருந்து 5.27 பில்லியன் டாலர், சிங்கப்பூர் 1.72 பில்லியன் டாலர், அமெரிக்கா 1.15 பில்லியன் டாலர், நெதர்லாந்தில் இருந்து 580 மில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளது என மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.


எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

Show comments