Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏற்றுமதி அதிகரிப்பு!

Webdunia
திங்கள், 3 நவம்பர் 2008 (17:07 IST)
புது டெல்ல ி: இந்த நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்தியாவின் ஏற்றுமதி 30.9 விழுக்காடு அதிகரித்துள்ளது.

ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களில் 94,973 டாலர் (ரூ.4,05,118 கோட ி) மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது டாலர் மதிப்பில் 30.9 விழுக்காடும், ரூபாய் மதிப்பில் 36.7 விழுக்காடு உயர்வு.

சென்ற நிதி ஆண்டில் இதே கால கட்டத்தில் 72,556 மில்லியன் டாலர் மதிப்பிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. (ரூ.2,96,423 கோட ி)

இந்தியாவில் ஏற்றுமதி செய்யும் பொருட்கள் சென்ற வருடம் செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில். இந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் 10.4 விழுக்காடு அதிகரித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் 13,748 மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது 10.4% உயர்வு.(சென்ற வருடம் செப்டம்பர் 12,455 மில்லியன் டாலர்).

அதே நேரத்தில் இந்திய ரூபாய் மதிப்பில் கணக்கிடுகையில் செப்டம்பர் மாத ஏற்றுமதி 24.7% அதிகரித்துள்ளது. இந்த மாதத்தில் ரூ.62,641 கோடி மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் செப்டம்பர் மாதத்தில் இறக்குமதி 43.3 விழுக்காடு அதிகரித்துள்ளது. (ரூபாய் மதிப்பில் இறக்குமதி 61.9 விழுக்காடு),

இந்த மாதத்தில் 24,380 மில்லியன் டாலர் மதிப்பிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. .(சென்ற வருடம் செப்டம்பர் 17,009 மில்லியன் டாலர்)


ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதத்தில் 1,54,744 மில்லியன் டாலர் (ரூ.6,61,208 கோட ி) மதிப்புள்ள பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இது டாலர் மதிப்பில் 38.6% அதிகம். அதே நேரத்தில் ரூபாய் மதிப்பில் 44.9% அதிகம். (சென்ற நிதி ஆண்டில் 1,11,654 மில்லியன் டாலர்-ரூ.4,56,407).

இந்த செப்டம்பர் மாதத்தில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் 9,096 மில்லியன் டாலர் மதிப்பிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது சென்ற செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 57.1% அதிகம்.

சென்ற வருடம் செப்டம்பர் மாதத்தில் 5,792 மில்லியன் டாலர் மதிப்பிற்கு இறக்குமதி செய்யப்பட்டது.

இந்த நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களான ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை 55,063 மில்லியன் டாலர் மதிப்பிற்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

சென்ற வருடம் இதே காலகட்டத்தில் 34,590 மில்லியன் டாலர் மதிப்பிற்கு இறக்குமதி செய்யப்பட்டு இருந்தது.

செப்டம்பரில் கச்சா எண்ணெய் தவிர மற்ற பொருட்கள் 15,284 மில்லியன் டாலர் மதிப்பிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது சென்ற வருடம் செப்டம்பருடன் ஒப்பிடுகையில் 36.2 விழுக்காடு உயர்வு. (சென்ற செப்டம்பரில் 11,218 மில்லியன் டாலர்).

இந்த நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் கச்சா எண்ணெய் இல்லாத மற்ற வகை பொருட்கள் 99,681 மில்லியன் டாலர் மதிப்பிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இது சென்ற வருடத்தை விட 29.3 விழுக்காடு அதிகம். (சென்ற வருடம் 77,064 மில்லியன் டாலர்).

இந்ச வருடம் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதத்தில் வர்த்தக பற்றாக்குறை 59,771 மில்லியன் டாலராக உள்ளது. (சென்ற வருடம் 39,098 மில்லியன் டாலர்).
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments