Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புது டெல்லியில் வைர வர்த்தக சான்றிதழ் திட்ட மாநாடு :

Webdunia
வெள்ளி, 31 அக்டோபர் 2008 (13:11 IST)
புது தில்ல ி: வைர வர்த்தகத்தின் “கிம்பர்ல ே ” நடைமுறைச் சான்றிதழ் திட்ட மாநாடு வருகின்ற 3 ஆம் தேதி புது தில்லி நடைபெறுகிறது. இந்த மாநாட்டை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கமல்நாத் துவக்கி வைக்கிறார்.

பட்டைதீட்டப்படாத வைரக்கற்கள் வர்த்தகத்தில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்குவதுதான் கிம்பர்லே நடைமுறைச் சான்றிதழ் திட்டம்.

இதன் மூலம் தரமில்லாத வைர வர்த்தகம் தடை செய்யப்படுவதோட ு, சட்டப்படியான வைர வர்த்தகம் நடைபெற வழிவகை செய்யப்படுகிறது.

கிம்பர்லே நடைமுறைச் சான்றிதழ் திட்டத்தில் 74 நாடுகளின் 48 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அதன் உறுப்பு நாடுகள் தனிப் பங்கேற்பாளர்களாக உள்ளனர். இந்த திட்டத்தைத் துவக்கிய உறுப்பு நாடுகளில் இந்தியாவு ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டத்தின் தலைமை பொறுப்பு உறுப்பு நாடுகளிடையே சுழற்சி முறையில் குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கப்படும். தலைமை பொறுப்பை ஏற்கும் நாடு வைர வர்த்தகம ், ஏற்றுமத ி, செயற்குழு மற்றும் மற்ற குழு செயல்பாடுகளைக் கண்காணிக்கும்.

இந்த ஆண்டு இந்தியா தலைமை பொறுப்பை வகித்து வருகிறது.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments