Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுவாணி அணை நீர் மட்டம் அதிகரிப்பு!

Webdunia
புதன், 29 அக்டோபர் 2008 (13:51 IST)
கோவ ை: கடந்த வாரத்தில் பெய்த கன மழையால், சிறுவாணி அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது.

சிறுவாணி, பில்லூர் அணைகளில் இருந்து கோவை நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. சிறுவாணி அணையில் இருந்து தினசரி 75 மில்லியன் லிட்டரும், பில்லூர் அணையில் இருந்து 63 மில்லியன் லிட்டர் தண்ணீர் கோவை நகர குடிநீருக்காக பெறப்படுகிறது.

இந்த அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில். தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டது. இதனால் சிறுவாணி அணை நிரம்பவில்லை.

இதற்கு மாறாக வடகிழக்கு பருவமழை பெய்துவருகிறது. இதனால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.

இந்த அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான சிறுவாணி மலை மற்றும் அங்குள்ள பாம்பாற ு, பட்டியாற ு, முக்திகுளம் சுனைகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்த பகுதிகளில் இன்னும் இரு தினங்களுக்குள் கன மழை பெய்தால் அணை நிரம்பிவிடும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்..

சிறுவாணி அணை கடந்த வருடம் ஜூலை 17-ம் தேதி நிரம்பியது. இதன் நீர் மட்டம் தொடர்ந்து 3 மாதங்களுக்கு குறையாமல் இருந்தது. இந்த ஆண்டு இதுவரை அணை நிரம்பவில்லை.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

Show comments