Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழையால் தேயிலை உற்பத்தி பாதிப்பு!

Webdunia
வெள்ளி, 24 அக்டோபர் 2008 (18:46 IST)
குன்னூர ் : நீலகிரி மாவட்டத்தில ் கடந்த ஒருவார காலமாக பெய்து வரும் தொடர் மழையால் தேயிலை உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டதில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 1583 மி.மீ. மழை பெய்துள்ளது. இதனால் தேயிலை தோட்டத்தில் தேயிலையை பறிக்க முடியவில்லை.


தேயிலை தொழிற்சாலைகளுக்கு வரும் பசும் தேயிலைகளின் வரத்தும் வெகுவாக குறைந்துள்ளது. தொடரும் மழையுடன், மின்வெட்டும் இருந்து வருவதால் தேயிலை உற்பத்தி பெருமளவு குறைந்துள்ளது.

இங்கு தினசரி சராசரியாக தேயிலை தொழிற்சாலைக்கு 8 முதல் 10 ஆயிரம் கிலோ பசுந்தேயிலை வருவது வழக்கம்.

தற்போது மழை பெய்து வருவதால் 20 விழுக்காடு வைர பசுந்தேயிலை வரத்து குறைந்துள்ளதாக தேயிலை தொழிற்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்க சட்டமன்றத்தில் பேசுவோம்.. உங்கள மாதிரி பட்டிமன்றத்தில் அல்ல! - சீமானுக்கு தவெக கொடுத்த அதிரடி பதில்!

காசாவை வாங்கவில்லை.. எடுத்துக்கப்போறோம்! ஒழுங்கா சொல்றதை செய்யணும்! - ஹமாஸ்க்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

அரசுப்பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் பெருகிவருவது ஏன் திரு. ஸ்டாலின்? வானதி சீனிவாசன் கேள்வி

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா? உச்சநீதிமன்றம் கேள்வி..!

அரசு பள்ளி சுவர் இடிந்ததால் பரபரப்பு.. மூன்று மாணவர்கள் படுகாயம்..!

Show comments