Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹமாம் வழங்கும் சேலை பரிசுத் திட்டம்

Webdunia
ஹிந்துஸ்தான் யுனிலிவர் லிமிடெட் குழுமத்தில் அடங்கிய ஹமாம் சோப் நிறுவனம் தமிழகத்தில் `ஹமாம் சேரி ஆஃபர்' எனும் புதிய சேலை பரிசு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பிரபல நடிகை அனுஹாசன் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள ஹமாம் சோப் உபயோகப்படுத்தும் வாடிக்கையாளர்கள் 5 ஆயிரம் பேருக்கு இத்திட்டத்தின் கீழ் சேலை பரிசாக வழங்கப்படும்.

பரிசு பெற விரும்புவோர் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.

`` ஹமாம் சோப் உங்களை அழகாக வைத்திருக்க எந்தவகையில் உதவியது?'' என்பதற்கான காரணங்களை, 6 ஹமாம் சோப் மேல்கவருடன் ( wrappers) சேர்த்து, ஹமாம் சேலை பரிசுத் திட்டம், ஆல்ஃபா டேட்டா சென்டர், தபால் பெட்டி எண்: 3904, கிர்காம் தலைமை அஞ்சலகம், மும்பை 400 004 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டியது மட்டுமே.

டிசம்பர் 20-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படுவோர் விவரம் ஒவ்வொரு வாரமும் அறிவிக்கப்படும்.

ஹமாம் சேலை பரிசுத் திட்டத்தின் விளம்பரத் தூதராக நடிகையும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருமான அனுஹாசன் இருப்பார் என்று ஹிந்துஸ்தான் யுனிலிவர் பொதுமேலாளர் ஸ்ரீகாந்த் சீனிவாச மாதவன் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சேலை பரிசு பெறும் 5 ஆயிரம் அதிர்ஷ்டசாலிகளில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு, அவரது இல்லத்திற்கே அனுஹாசன் நேரில் சென்று சேலையை வழங்குவதுடன் அனுஹாசனுடன் விளம்பரப் படத்திலும் நடிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்றார் அவர்.

இயற்கையான மூலப்பொருட்களைக் கொண்டு நுகர்வோருக்கு அவர்களின் பாரம்பரிய முறையுடன் கூடிய உடல் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் ஹமாம் சோப் எப்போதுமே முக்கியப் பங்காற்றுவதாக நிகழ்ச்சியில் பங்கேற்ற அனுஹாசன் குறிப்பிட்டார்.

பாரம்பரியம் மிக்க ஹமாம் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதில் தாம் மிகுந்த பெருமை அடைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

Show comments