டோக்கிய ோ: இந்தியாவுக்கும், ஜப்பானுக்கும் 21 ஆம் நூற்றாண்டு சாதகமானது என்ற கணிப்பை வெளியிட்ட பிரதமர் மன்மோகன் சிங், இந்தியாவில் அதிக அளவு படித்தவர்கள், திறன் பெற்ற ஊழியர்கள். உள்ளனர். அத்துடன் 2020 அல்லது 2040 ஆண்டில் அதிக நுகர்வோர்களை கொண்ட நாடாகவும் இருக்கும்.
இதனை கருத்தில் கொண்டு, இந்தியாவின் மீது நம்பிக்கை வைத்து, முதலீடு செய்யுமாறு ஜப்பானைச் சேர்ந்த தொழில் மற்றும் வர்த்தக பிரமுகர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்தார்.
ஜப்பானுக்கு மூன்று நாள் பயணமாக வந்துள்ள மன்மோகன் சிங், டோக்கியோவில் ஜப்பான், இந்தியாவைச் சேர்ந்த தொழில், வர்த்தக பிரமுகர்களின் கூட்டத்தில் உரையாற்றினார்.
PIB Photo
PIB
அப்போது அவர், புதிதாக முதலீடு செய்பவர்கள், புதிய சூழ்நிலைகளில் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதிருக்கும் என்று அச்சப்படுகின்றனர் என்று கூறிய மன்மோகன் சிங், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான இரு தரப்பு வர்த்தகத்தின் அளவு, ஜப்பானுக்கும்,. இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகத்தை விட அதிகம் என்பதை ;சுட்டிக் காட்டினார்.
இந்தியாவில் ரெப்ரிஜேட்டர் போன்ற வகை பொருட்களின் விற்பனையில், கொரியாவின் தயாரிப்புகளே முதல் இடத்தை வகிக்கின்றன. கொரிய தயாரிப்புகளுக்கு மக்களிடையே உயர்ந்த அங்கிகாரமும் உள்ளது.
உலக பொருளாதார வளர்ச்சியை, முன்னோக்கி எடுத்துச் செல்வதில், இந்தியா முன்னணியில் உள்ளது என்று கூறிய பிரதமர், இந்த பயணத்தை தொடர, இந்தியாவுடன் கூட்டாளியாக வருமாறு ஜப்பானியர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
வறுமை ஒழிப்பிற்கும், இடைவிடாத வளர்ச்சிக்கும் பங்காற்றுவதில் ஜப்பான் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று மன்மோகன் சிங் விருப்பம் தெரிவித்தார்.