Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர‌க்கு‌ப் போ‌க்குவர‌த்து ரயில்வே வருவாய் 18.91 ‌விழு‌க்காடு அதிகரிப்பு!

Webdunia
திங்கள், 20 அக்டோபர் 2008 (17:04 IST)
ந‌ட‌ப்பா‌ண்டி‌ன் ஏ‌‌ப்ர‌ல் முத‌ல் செ‌‌ப்ட‌ம்ப‌ர் வரை‌யிலான கால‌த்‌தி‌ல் சர‌க்கு‌ப் போ‌க்குவர‌த்து மூல‌மாக ர‌யி‌ல்வே துறை‌‌க்கு ‌கிடை‌த்து‌ள்ள வருவா‌ய் 18.91 ‌விழு‌க்காடு அ‌திக‌ரி‌த்து‌ள்ளது எ‌ன்று ம‌த்‌திய அரசு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களில் சரக்கு போக்குவரத்து மூலமாக ரூ.25,502.95 கோடி வருவா‌ய ் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டின் இதே 6 மாதங்களில் கிடைத்த வருவா‌ய ் ரூ.21,447.48 கோடியைவிட இது 18.91 ‌விழு‌க்காட ு அதிகமாகு‌ம ்.

கடந்த ஆண்டில் 37.03 கோடி டன் சரக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இது இந்த ஆண்டில் 8.55 ‌விழு‌க்காடு அதிகரித்து 40.1 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டின் ஏப்ரல் முத‌ல ் செப்டம்பர் வரை‌யிலா ன மாதங்களில் சரக்குகள் மற்றும் தொலைவை குறிப்பிடும் என்.டி.கே.எம் புள்ளி 2,37,564 கோடி என்ற அளவில் இருந்து இந்த ஆண்டில் 2,60,367 கோடியா க உயர்ந்துள்ளது. இது 9.6 ‌விழு‌க்காட ு வளர்ச்சியாகும்.

இ‌ந் த ஆண்டு செப்டம்பரில் 2.86 கோடி டன் நிலக்கரி மூலமாக ரூ.1,454.90 கோடியு‌ம், 1.02 கோடி டன் இரும்பு தாது மூலமாக ரூ.656.09 கோடியு‌ம், 65 லட்சம் டன் சிமென்ட் மூலமாக ரூ.328.67 கோடியு‌ம், 40.7 லட்சம் டன் உரம் மூலமாக ரூ.258.35 கோடியு‌ம், 28.1 லட்சம் ட‌ன் உணவு தானியங்கள் மூலமாக ரூ.273.87 கோடியு‌ம் வருவா‌ய ் கிடைத்துள்ளது.

மேலு‌ம், 31.1 லட்சம் டன் பெட்ரோலிய எண்ணெய், உயவு எண்ணெய் மூலமாக ரூ.245.51 கோட ி‌ யு‌ம், 22.1 லட்சம் டன் எஃகு உள்ளிட்ட பொருட்கள் மூலமாக ரூ.223.85 கோடியு‌ம், எஃகு தொழிற்சாலைகளுக்கான மற்ற மூலப் பொருட்கள் 9.4 லட்சம் டன் மூலமாக ரூ.63.85 கோடியு‌ம், 24.9 லட்சம் டன் சரக்கு பெட்டக சேவை மூலமாக ரூ.208.85 கோடியு‌ம், மற்ற பொருட்கள் 49.5 ல‌ட்ச‌ம் டன் மூலமாக ரூ.289.34 கோடியு‌ம ் வருவா‌ய ் கிடைத்துள்ளது எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

Show comments