Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல் கொள்முதல் விலை அதிகரிப்பு!

Webdunia
புது டெல்ல ி: விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு ஊக்கத் தொகையாக ( போனஸ ்) குவின்டாலுக்கு ரூ.50 வழங்குவது என மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரங்களுக்கான குழு முடிவு செய்தது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று அமைச்சரவையின் பொருளாதார விவகாரங்களுக்கான குழு கூட்டம் நடந்தது.

இதில் கரிப் பருவத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு ஊக்கத்தொகையாக குவின்டாலுக்கு ரூ, 50 வழங்குவதென முடிவு செய்யப்பட்டது.

மத்திய அரசு ஏற்கனவே சன்னரக நெல்லுக்கு கொள்முதல் விலை (குறைந்தபட்ச ஆதார விலை) குவின்டாலுக்கு ரூ.880ம், மற்ற ரக நெல்லுக்கு ரூ.850 என நிர்ணயித்து இருந்தது.

இனி மத்திய அரசு ஊக்கத்தொகையுடன் சன்னரக நெல்லுக்கு குவின்டாலுக்கு ரூ.980ம், மற்ற ரக நெல்லுக்கு ரூ.950 வழங்கும்.

இந்த புதிய விலை 2008-09 பருவத்திற்கு பொருந்தும்.

மத்திய அரசு வழங்கும் கொள்முதல் விலையுடன், தமிழக அரசு ஏற்கனவே ஜூன் மாதம் முதல் ஊக்கத்தொகையாக குவின்டாலுக்கு ரூ.150 வழங்கி வருகிறது.

இனி தமிழகத்தில் கொள்முதல் செய்யப்படும் சன்னரக நெல்லுக்கு குவின்டாலுக்கு ரூ. 1,100ம், மற்ற ரக நெல்லுக்கு ரூ. 1,050ம் கிடைக்கும்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments