Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணவீக்கம் 11.44% ஆக குறைந்தது.

Webdunia
வியாழன், 16 அக்டோபர் 2008 (16:00 IST)
புது டெல்ல ி: பணவீக்கம் இரண்டாவது வாரமாக குறைந்துள்ளது. மொத்த விலை அட்டவணையை அடிப்படையாக பணவீக்கம் கணக்கிடப்படுகிறது.

அக்டோபர் 4 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 11.44 ஆக குறைந்துள்ளது

இதற்கு முந்தைய வாரத்தில் 11.80 விழுக்காடாக இருந்தது.

அதே நேரத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் வாரத்தில் பணவீக்கம் 3.22 விழுக்காடாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வாரம் சில உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது ராகி 11%, சோளம் 2%, பழங்கள் மற்றும் காய்கறி விலை 3% அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில் ரப்பர் விலை 18%, நிலக்கடலை விலை 1% குறைந்துள்ளது.

ஆனால் ஆமணக்கு, எள் விலை தலா 1% அதிகரித்துள்ளது.

புண்ணாக்கு விலை 12%, இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய் விலை 5%, தவிட்டு எண்ணெய் விலை 3%, பருத்தி எண்ணெய் விலை 1% குறைந்துள்ளது.

வெல்லம் விலை 4%, உப்பு விலை 2%, நல்லெண்ணெய் விலை 1% உயர்ந்துள்ளது.

பெட்ரோலிய பொருட்களில் நாப்தா விலை 11%, விமான பெட்ரோல் விலை 6%, உலை எண்ணெய் விலை 5% குறைந்துள்ளது. தார் விலை 4% குறைந்துள்ளது.

உருக்கு இரும்பு பொருட்களின் விலை 11%, தேனிரும்பு விலை 6%, துத்தநாகம் 4%, ஈயம் 2%, குறைந்துள்ளது.

உருக்கு கம்பி விலை 4% உயர்ந்துள்ளது.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

Show comments