பணவீக்கம் 11.80% ஆக குறைந்தது!

Webdunia
வெள்ளி, 10 அக்டோபர் 2008 (16:58 IST)
புது டெல்ல ி: பணவீக்கம் சிறிது குறைந்துள்ளது. மொத்த விலை அட்டவணையை அடிப்படையாக பணவீக்கம் கணக்கிடப்படுகிறது.

இது செப்டம்பர் 27 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 11.80 விழுக்காடாக குறைந்துள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில் 11.19 விழுக்காடாக இருந்தது.

பணவீக்கம் குறைந்ததற்கு முக்கிய காரணம் காய்கறிகள், பழங்களின் விலை 1% குறைந்ததே. நிலக்கடலை விலை 2%, பருப்பு மற்றும் சிறு தானியங்களின் விலை 0.1% குறைந்துள்ளது.

அதே நேரத்தில் பால் விலை 1%, இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் விலை 5% அதிகரித்துள்ளது.

தொழில் உற்பத்தி துறை பொருட்களில் குழாய் வகைகளின் விலைகள் 2% குறைந்துள்ளன. இரும்பு, உருக்கு, சிமென்ட் விலைகளில் மாற்றம் இல்லை.

பணவீக்கம் பல வாரங்களாக 12 விழுக்காட்டிற்கும் அதிகமாக இருந்தது. செப்டம்பர் 20 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 11.99% ஆக குறைந்தது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று திருநெல்வேலி.. நாளை கடலூர்!.. விஜயின் பிரச்சார திட்டம் என்ன?...

ஹோர்மூஸ் நீரிணை கடக்க கப்பலுக்கு ரூ.18.5 கோடி. ஈரான் அறிவிப்பு!.. பொருட்கள் விலை ஏறுமா?...

ரெப்போ வட்டி விகிதத்தில் என்ன மாற்றம்? ரிசர்வ் வங்கி கவர்னரின் முக்கிய அறிவிப்பு..!

பங்குச்சந்தை மட்டுமல்ல, தங்கம் வெள்ளி விலையும் உச்சம்.. ஒரே நாளில் 2,720 ரூபாய் உயர்ந்த தங்கம்..!

போர் நிறுத்த அறிவிப்பு எதிரொலி: உச்சத்திற்கு சென்ற பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 2700 புள்ளிகள் உயர்வு..!

Show comments