Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாய விளை பொருட்கள் பற்றி சில முக்கிய தகவல்கள்:

Webdunia
வியாழன், 9 அக்டோபர் 2008 (17:08 IST)
விவசாய விளை பொருட்கள் பற்றி சில முக்கிய தகவல்கள ்:

· மலேஷியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பாமாயில் அளவு செப்டம்பர் மாதத்தில் 19 விழுக்காடு குறைந்துள்ளது.

· இந்தியாவில் அக்டோபர் -டிசம்பர் மாதங்களில் வெளிச் சந்தையில் சர்க்கரை விற்பனை செய்வதற்கு 5.2 மில்லியன் டன் அனுமதிக்கப்பட்டுள்ளது. சென்றவருடம் இதே கால கட்டத்தில் 4.2 மில்லியன் டன் அனுமதிக்கப்பட்டது.

· இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்க்கு, மத்திய அரசு வரி விதிப்பதற்காக அறிவிக்கும் அடிப்படை விலையில் மாற்றம் இல்லை.

· இந்த வருடம் ஜீன் 1 ஆம் தேதி முதல் அக்டோபர் 1 ஆம் தேதி வரை 5.19 மில்லியன் பரப்பளவில் நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளது. சென்ற வருடம் இதே காலத்தில் 5.4 மில்லியன் ஹெக்டேரில் தான் நிலக்கடலை பயிரிடப்பட்டு இருந்தது.

· இதே போல் சோயா 9.62 மில்லியன் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது. சென்ற வருடம் 8.8 மில்லியன் ஹெக்டேரில் மட்டுமே சோயா பயிரிடப்பட்டு இருந்தது.

· ஜீன் 1 ஆம் தேதி முதல் அக்டோபர் 1 ஆம் தேதிவரை 18.19 மில்லியன் ஹெக்டேரில் எண்ணெய் வித்துக்கள் பயிரிடப்பட்டுள்ளன. சென்ற வருடம் 17.16 மில்லியன் ஹெக்டேரில் மட்டுமே எண்ணெய் வித்துக்கள் பயிரிடப்பட்டு இருந்தது.

· ஜீன் 1 ஆம் தேதி முதல் அக்டோபர் 3 ஆம் தேதிவரை 7.12 மில்லியன் ஹெக்டேரில் மக்காச் சோளம் பயிரிடப்பட்டுள்ளது. சென்ற வருடம் 7.3 மில்லியன் ஹெக்டேரில் மக்காச் சோளம் பயிரிடப்பட்டு இருந்தது.

· ஜீன் 1 ஆம் தேதி முதல் அக்டோபர் 3 ஆம் தேதிவரை 9.08 மில்லியன் ஹெக்டேரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சென்ற வருடம் 9.20 மில்லியன் ஹெக்டேரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு இருந்தது.

· ஜீன் 1 ஆம் தேதி முதல் அக்டோபர் 3 ஆம் தேதிவரை 4.42 மில்லியன் ஹெக்டேரில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சென்ற வருடம் 5.3 மில்லியன் ஹெக்டேரில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு இருந்தது.

· ஜீன் 1 ஆம் தேதி முதல் அக்டோபர் 3 ஆம் தேதிவரை 38.14 மில்லியன் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சென்ற வருடம் 36.9 மில்லியன் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது.

· ஜீன் 1 ஆம் தேதி முதல் செப்டம்பபர் 30 ஆம் தேதிவரை 8,61,000 ஹெக்டேரில் ஆமணக்கு பயிரிடப்பட்டுள்ளது. சென்ற வருடம் 7,75,000 ஹெக்டேரில் ஆமணக்கு பயிரிடப்பட்டு இருந்தது.

· ஜீன் 1 ஆம் தேதி முதல் அக்டோபர் 3 ஆம் தேதிவரை 10.4 மில்லியன் ஹெக்டேரில் பருப்பு வகைகள் பயிரிடப்பட்டு உள்ளது. சென்ற வருடம் 12.3 மில்லியன் ஹெக்டேரில் பருப்பு வகைகள்
பயிரிடப்பட்டு இருந்தது.

· ஜீன் 1 ஆம் தேதி முதல் அக்டோபர் 3 ஆம் தேதிவரை 19.8 மில்லியன் ஹெக்டேரில் சிறு தானியங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சென்ற வருடம் 21.1 மில்லியன் ஹெக்டேரில் சிறு தானியங்கள் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments