Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரக மின்வசதி நிறுவனம் 30% ஈவு தொகை!

Webdunia
செவ்வாய், 7 அக்டோபர் 2008 (15:38 IST)
புது டெல்ல ி: ஊரக வளர்ச்சி நிறுவனம் [ Rural Electrification Corporation (REC)] கடந்த நிதி ஆண்டிற்கான பங்கு ஈவுத்தொகை ரூ.210.76 கோடி, மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது.

மத்திய மின்துறை அமைச்சர் சுசில் குமார் ஷின்டேயிடம், இதன் மேலாண்மை இயக்குநர் பி.உமா சங்கர் ரூ. 210.76 க்கான காசோலையை வழங்கினார்.

இந்த நிறுவனம் சென்ற நிதி ஆண்டில் (2007-08 ) 30 விழுக்காடு பங்கு ஈவுத்தொகை அறிவித்துள்ளது. இதில் மத்திய அரசின் பங்காக ரூ.210.76 கோடி வழங்கியுள்ளது. இது மற்ற பங்குதாரர்களுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.257.59 கோடி ஈவுத் தொகை வழங்கியுள்ளது.

இதன் வரிக்கு பிந்தைய இலாபம் ரூ.860.15 கோடியாக உயர்ந்துள்ளது. இது சென்ற வருடத்தைவிட 30 விழுக்காடு அதிகம். (சென்ற வருடம் ரூ.660.26 கோடி).

இந்நிறுவனம் ஊரக பகுதிகளின் மின் திட்டங்களுக்காக கடன் கொடுத்து வருகிறது. இது 2008 மார்ச் 31 ஆம் தேதி வரை ரூ.1,79,526 கோடி கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதில் ரூ.75,243 கோடி கடன் வழங்கி உள்ளது.

2007-08 ஆம் நிதி ஆண்டில், இதன் நிகர மதிப்பு ரூ.5367.71 கோடியாக உள்ளது. இந்த விகிதப்படி 1 பங்கின் வருவாய் ரூ.10.94.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

Show comments