Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.சி.எஸ். பங்குச் சந்தையில் அந்நிய செலவாணி வர்த்தகம்.

Webdunia
திங்கள், 6 அக்டோபர் 2008 (17:02 IST)
எம்.சி.எஸ். பங்குச் சந்தையில் அந்நிய செலவாணி வர்த்தகம்.

இந்தியாவின் பண்டக வர்த்தக சந்தையான மல்டி கமோடிட்டி எக்சேஞ்சின் துணை நிறுவனம் எம்.சி.எஸ்.- பங்குச் சந்தை [ MCX Stock Exchange Ltd (MCX-SX)]. இதில் நாளை முதல் அந்நியச் செலவாணி முன்பேர வர்த்தகம் தொடங்கப்படுகிறது.

அந்நியச் செலவாணியில் அமெரிக்க டாலருக்கு முன்பேர வர்த்தகம் ஏற்கனவே தேசிய பங்குச் சந்தை, மும்பை பங்குச் சந்தையில் நடந்து வருகிறது.

இந்த பங்குச் சந்தையில் அமெரிக்க டாலருக்கு முன்பேர வர்த்தகத்தை இன்று காலை செபி தலைவர் சி.பி.பாவே தொடங்கிவைத்தார்.

இங்கு நாளை முதல் அமெரிக்க டாலருக்கு முன்பேர வர்த்தகம் தொடங்குகிறது. இந்த வர்த்தகம் திஙகட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

முன்பேர சந்தையில் டாலர் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் 12 மாதங்களுக்கு ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்.

தேசிய பங்குச் சந்தையில் அமெரிக்க டாலருக்கு முன்பேர வர்த்தகம் சென்ற ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதே போல் மும்பை பங்குச் சந்தையில் இந்த மாதம் முதல் தேதி முதல் தொடங்கப்பட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments