Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புள்ளியியல் கிளை மாற்ற எதிர்ப்பு!

Webdunia
கோவை : கோவையில் செயல்படும் இந்திய புள்ளியியல் கழகத்தின் கிளையை, சென்னைக்கு மாற்ற தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர் சங்கம் (சீமா) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதை சென்னைக்கு மாற்றக் கூடாது என வலியுறுத்தி, அயலுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜ ி, மத்திய புள்ளியியல் துறை இணை அமைச்சர் ஜி.கே.வாசன் ஆகியோருக்கு, சங்கத்தின் தலைவர் ஜெயக்குமார் மனு அனுப்பி உள்ளார்.

அந்த மனுவில், இந்திய புள்ளியியல் துறையின் கோவை கிளை பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. பொருட்களின் தரம ், பணிபுரிவோர் திறன் பற்றிய விவரம ், உற்பத்தி செலவை குறைத்தல ், சந்தை நிலவரம ், வியாபார தோல்விக்கான காரணங்கள் போன்ற விவரங்களை இந்திய புள்ளியியல் கழகத்தின் கோவை கிளை மூலம் சீமாவின் உறுப்பினர்கள் பெறுகின்றனர்.

இதை சென்னை அலுவலகத்துடன் இணைப்பதால ், கோவை கிளையின் மூலம் பொறியியல் நிறுவனங்கள் பெற்று வந்த ஆதரவை இழக்க நேரிடும். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கோவை கிளையை மாற்றுவதற்கு சீமா கடும் எதிர்ப்பு தெரிவித்து கொள்கிறது.

இது தொடர்ந்து கோவையிலேயே செயல்பட அனுமதிக்க வேண்டும் கேட்டுக் கொண்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments