Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாய நிலம் தொழிற்சாலைக்கு இல்லை- அமைச்சர்!

Webdunia
சனி, 4 அக்டோபர் 2008 (16:53 IST)
டேராடூன ்: நானோ கார் தொழிற்சாலைக்கு விவசாய நிலம் கொடுப்பதை கடுமையாக எதிர்ப்பதாக ஜார்கண்ட் மாநில விவசாய அமைச்சர் திருவேந்திர சிங் ரவாத் கூறியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து, உத்தரகான்டில் உள்ள பாட் நகருக்கு நானோ கார் தொழிற்சாலை மாற்றக்கூடிய சாத்தியம் இருப்பதாக கூறப்படுகிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்கனவே டாடா மோட்டார் நிறுவனத்தின் வாகன உற்பத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு “ஏஸ ் ” ரக வாகனம் தயாரிக்கப்படுகிறது.

இந்நிலையில் உத்தரகான்ட் மாநில விவசாய அமைச்சர் திருவேந்திர சிங் ரவாத் கூறுகையில், விவசாய நிலம் விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கூறியனார்.

அத்துடன் பாட்நகர் வேளான் பல்கலைக் கழகத்திற்கு சொந்தமான நிலத்தில், 50 ஏக்கரை டாடா மோட்டார் நிறுவனத்திற்கு மாநில அரசு வழங்க இருப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இவ்வாறு செய்தால் சிங்கூர் நிலைமை இங்கும் உருவாகும் என்று எச்சரித்தார்.

கடந்த மாதம் டாடா மோட்டர் நிறுவன மூத்த அதிகாரிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் போது, டாடா மோட்டார் நிறுவன ஊழியர்களின் குடியிருப்பு கட்ட 50 ஏக்கர் நிலத்தை நிலத்தை வழங்குவதாக மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன் மாநில அரசு மூத்த அதிகாரிகள் ஏற்கனவே ஏஸ் ரக வாகனம் தயாரிக்கும் தொழிற்சாலையில், மற்ற ரக கார் உற்பத்தியும் தொடங்கலாம் என்று வலியுறுத்தினர்.

இங்கு ஏற்கனவே ஆயிரம் ஏக்கர் நிலத்தில் டாடா நிறுவனத்தின் தொழிற்சாலை அமைந்துள்ளது. இத்துடன் கூடுதலாக 100 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும். இந்த 1000 ஏக்கர் நிலத்திற்கு விதித்துள்ள வாடகையை குறைக்க வேண்டும் என்று டாடா மோட்டார் நிறுவன அதிகாரிகள் வலியுறுத்தினார்கள்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments