Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முக்கியப் பொருட்கள் இறக்குமதி அதிகரிப்பு!

Webdunia
வெள்ளி, 3 அக்டோபர் 2008 (17:54 IST)
நடப்பாண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில் காய்கறிகள், பழங்கள், பருத்தி, பட்டு, ஆட்டோமொபைல், சிறு தொழில் உற்பத்திப் பொருட்கள், வாசனைப் பொருட்கள், ரப்பர், தேயிலை, காபி முதலிய முக்கிய பொருட்களின் மொத்த இறக்குமதி 11.2 ‌விழு‌‌க்காட ு அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு ரூ.8,722 கோடியாக இருந்த இறக்குமதி நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் ரூ.9,696 கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு மற்றும் நடப்பாண்டில் மொத்த இறக்குமதியில் இ‌ந் த முக்கிய பொருட்களின் இறக்குமதி முறையே 2.8 மற்றும் 2.3 ‌விழு‌க்காட ு பங்கு வகிக்கிறது.

சமையல் எண்ணெய்யை பொருத்தவரை கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இறக்குமதி மதிப்பு ரூ.3,778 கோடியாகும். நடப்பாண்டில் இது ரூ.3,698 கோடியாக குறைந்துள்ளது. சு‌த்‌திக‌ரி‌‌க்க‌ப்படா த சமையல் எண்ணெயின் இறக்குமதி 4.7 ‌விழு‌க்காடு‌ம், ரிபைண்ட் எண்ணெயின் இறக்குமதி 19.9 ‌விழு‌க்காடு‌ம் நடப்பாண்டில் குறைந்துள்ளது. சோயாபீன் சு‌த்‌திக‌ரி‌‌க்க‌ப்படா த எண்ணெயின் இறக்குமதி கணிசமாக குறைந்ததால் சமையல் எண்ணெயின் இறக்குமதியும் சரிந்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? கவலை வேண்டாம்! 14,104 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு!

இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி வைரஸ் பரவியது: ஐ.சி.எம்.ஆர் உறுதி..!

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஏன் வெளியேறினார்? சபாநாயகர் அப்பாவு விளக்கம்..!

48 வருஷத்துல இப்படி நடந்தது இல்ல.. சீமான் கண்ணியம் தவறிவிட்டார்! - பபாசி தலைவர் கருத்து!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: கைதான 18 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து..!

Show comments