Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவே நெருக்கடிக்கு காரணம்- புதின்!

Webdunia
வெள்ளி, 3 அக்டோபர் 2008 (14:02 IST)
மாஸ்க ோ: அமெரிக்க பொருளாதார நெருக்கடியும், அதை தொடர்ந்து மற்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ள ரஷியா கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

அதே நேரத்தில் இந்த நெருக்கடியை தீர்க்க அமெரிக்கா பொறுப்புணர்ச்சியுடன் செயல்படவில்லை என்று ரஷ்ய பிரதமர் விளாதிமீர் புதின் குற்றம் சாட்டியுள்ளார்.

ரஷ்ய அமைச்சரவை கூட்டம் புதன் கிழமை நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு தொலைக்காட்சியில் புதின் பேசும் போது, நாங்கள் தகுந்த நடவடிக்கை எடுக்காததை உணர்கின்றோம். இது குறிப்பிட்ட நபரின் பொறுப்பு அல்ல. இந்த அமைப்பிற்கு தலைமை தாங்குவதாக கூறிக் கொள்பவர்களின் பொறுப்பு.

தற்போது ஏற்பட்டுள்ள எல்லா பொருளாதார நெருக்கடி, நிதி நெருக்கடியும் முதலில் அமெரிக்காவில் தான் தொடங்கியது என்று கூறினார்.

தற்போது ஏற்பட்டுள்ள நெடுக்கடி, ரஷ்யாவை பாதிக்காமல் இருக்க புதின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அந்த நாட்டு வங்கி அமைப்பில் 1.5 டிரில்லியன் ரூபிள் (25 ரூபிள்-1 அமெரிக்க டாலர்) புதிதாக அரசு வழங்கியுள்ளது. இத்துடன் பங்குச் சந்தையில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, பங்குகளை வாங்க 500 மில்லியன் ரூபிள் விடுவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

Show comments