Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொழில்- வர்த்தக நிறுவனங்களுக்கு விருது!

Webdunia
புதன், 1 அக்டோபர் 2008 (16:41 IST)
திருவள்ளூர ்: சமூ க, பொருளாதார மேம்பாட்டுப் பணிகளில் சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு விருது வழங்கி கெளரவிக்கிறது.

இந்த விருதுகளைப் பெற தொழில், வர்த்தக, சேவை துறைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் அக்டோபர் 10ஆ‌ம ் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

சமூ க, பொருளாதார மேம்பாட்டு பணிகளில் சிறந்து விளங்கும் தொழில ், சேவ ை, வர்த்தக நிறுவனங்களின் சிறந்த 5 விருது வழங்கப்படும். இந்த விருதுடன் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையும ், நற்சான்றிதழும் வழங்கப்படும்

இந்த விருது பெற அனைத்து தொழில ், சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்கள ், பொதுத்துற ை, தனியார ், கூட்டுத் துறை நிறுவனங்களும் விண்ணப்பிக்கலாம்.

இவை பங்கு அமைப்புகள ், தனியார் நிறுவனங்கள ், பொதுத்துறை நிறுவனங்கள ், அரசு சார்ந்த நிறுவனங்களாகவும் இருக்கலாம்.

தொழில ், சேவ ை, வர்த்தக நிறுவனங்களின் கூட்டமைப்புகளும் விண்ணப்பிக்கலாம்.

இந்நிறுவனங்கள் நேரடியாகவ ோ, தங்களின் அறக்கட்டளைகள ், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தங்களது இதர குழுமைகள் மூலமாகவோ செயலாற்றலாம்.

தனித்துவமான அறக்கட்டளைகள ், தொண்டு நிறுவனங்கள ், மன்றங்கள் மற்றும் சங்கங்கள் இவ்விருதினைப் பெற இயலாது.

இந்த விருதுக்கு ஊரகப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளே அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்படும். எனினும ், நகரங்களில் குடிசைப் பகுதிகளில் பாராட்டத்தக்க பணிகளும் தகுதியானவையாக எடுத்து கொள்ளப்படும்.

விவசாயம ், கால்நட ை, கல்வி, பொதுச் சுகாதாரம ், குடிநீர ், மழைநீர் சேகரிப்ப ு, மரபு சாரா எரிசக்த ி, வேளாண் பொருள்கள ், சந்தைப் படுத்துதல ், குழந்தைகள ், இளைஞர் நலன் ஆகியவைகளில் சிறப்பாகப் பங்கேற்கும் நிறுவனங்களும் விருதுக்கு பரிசீலிக்கப்படும்.

இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நிறுவனங்கள், விண்ணப்பங்களை தகுந்த ஆவணங்கள ், விவரங்களுடன் அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் அந்தந்த மாவட்ட ஆட்சியருக்க ோ, அல்லது ஆணையர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி சென்னை என்ற முகவரிக்கே அனுப்பி வைக்கலாம்.

இத்தகவலை திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

Show comments