Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உருளைக்கிழங்கு கமிஷன் குறைப்பு!

Webdunia
புதன், 1 அக்டோபர் 2008 (15:52 IST)
உதக ை: மேட்டுப்பாளையத்தில் இயங்கும் உருளைக்கிழங்கு கமிஷன் மண்டியில் அக்டோபர் 1ஆம் தேதி முதல ் 4 விழுக்காடு கமிஷன் தொகை மட்டுமே வசூலிக்கப்படுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த தகவலை நீலகிரி உருளைக்கிழங்கு மற்றும் காய்கறி உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக நீலகிரி உருளைக்கிழங்கு மற்றும் காய்கறி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் பி.கிருஷ்ணமூர்த்தி கூறியிருப்பதாவது:

நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகள் தங்களது விளைபொருட்களுக்கு பயிர் சாகுபடிக்காக செய்யும் செலவு மற்ற மாவட்டங்களைவிட கூடுதலாக உள்ளது.

மேலும் விவசாயிகளின் விளை பொருட்களை மேட்டுப்பாளையத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்யும் போத ு, உருளைக்கிழங்கிற்கு 7 விழுக்காடு கமிஷன் வசூலிக்கப்பட்டு வந்தது.

நீலகிரி விவசாயிகளின் சாகுபடி செலவ ு, கமிஷன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அக்டோபர் 1ஆம் தேதி முதல் மேட்டுப்பாளையத்தில் இயங்கும் என்.சி.எம்.எஸ் நிர்வாகம் உருளைக்கிழங்கிற்கு 4 விழுக்காடு கமிஷன் மட்டும் வசூலிக்குமென கூட்டுறவுத்துறை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் உதகையிலுள்ள என்.சி.எம்.எஸ் வளாகத்தில் தினசரி விற்பனை செய்யும் காய்கறிகளுக்கும் கமிஷன் தொகையாக 3 விழுக்காடு மட்டுமே வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்ட விவசாயிகள் இந்த சலுகையினை பெற்று பயனடைய வேண்டும். மேட்டுப்பாளையம் என ். ச ி. எம ். எஸ் சந்தையில் 4 விழுக்காடு கமிஷனை மட்டுமே செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

Show comments