Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை மேலும் சரியாது- அரசு செயலாளர்.

Webdunia
திங்கள், 29 செப்டம்பர் 2008 (18:32 IST)
பங்குச் சந்தை இன்றைய நிலையை விட, மேலும் சரியாது என மத்திய அரசு கருதுகிறது.

மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் நடக்கும் போது, சென்செக்ஸ் 700 புள்ளி சரிந்தது.

இது குறித்து மத்திய பொருளாதார விவகார துறை செயலாளர் அசோக் சாவ்லா கருத்து தெரிவிக்கையில், இந்த அளவை விட மேலும் குறையும் என்று எதிர்பார்க்கவில்லை என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அமெரிக்க நிதி நிறுவனங்களின் நெருக்கடியை தொடர்ந்து, இந்தியா உட்பட எல்லா நாட்டு பங்குச் சந்தைகளிளும் சரிந்தன.

இன்று பங்குச் சந்தைகளின் சரிவு பற்றி அசோக் சாவ்லா கூறுகையில், இந்தியாவின் பங்குச் சந்தைகளில் சரிவைப் போலவே, மற்ற நாடுகளிலும் சரிந்துள்ளன என்று தெரிவித்தார்.

அமெரிக்க வங்கி மட்டுமல்லாது, சில ஐரோப்பிய வங்கிகளிலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் ஒரு நிலையில் சென்செக்ஸ் 699 புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 12,402.48 புள்ளிகளாக குறைந்தது. இது இந்த வருடத்தில் இதற்கு முன் இருந்திராத அளவாகும்.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டியும் ஒரு நிலையில் 207.95 புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 3,777.30 ஆக குறைந்தது குறிப்பிடத்தக்கது.

இதே போல் ஹாங்காங், தென் கொரியா, ஜப்பான் பங்குச் சந்தையும் சரிவை சந்தித்தன.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments