Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார் தொழிற்சாலை நிலம் அரசுக்கு சொந்தமானதுதான்-டாடா மோட்டார்ஸ்!

Webdunia
திங்கள், 29 செப்டம்பர் 2008 (13:54 IST)
உத்தரகாண்ட் மாநிலத்தில் கார் தொழிற்சாலை அமைக்க கொடுத்த ஆயிரம் ஏக்கர் நிலம் அரசு நிலம்தான் என்று டாடா மோட்டார் நிறுவனம் கூறியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் டாடா மோட்டார் நிறுவனம் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைக்க மாநில அரசு 1,000 ஏக்கர் நிலம் வழங்கியுள்ளது. இதில் சரக்கு போக்குவரத்து வாகனமான ஏஸ் ( Ac e) ரக வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு ஏற்கனவே டாடா மோட்டார் நிறுவனம் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளது. அத்துடன் உதிரி பாகங்களை வழங்கும் மற்ற நிறுவனங்களும் தொழிற்சாலை அமைத்துள்ளன.

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் சில்குரியில் டாடா நிறுவனம் அமைத்து வரும் நானோ ரக கார் தொழிற்சாலைக்காக, விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்திய நிலம் தொடர்பாக பிரச்சனை எழுந்துள்ளது.

டாடா மோட்டார் நிறுவனம், நானோ கார் தொழிற்சாலையை உத்தரகாண்ட் மாநிலத்திற்கு மாற்றினால் போராட்டம் நடத்தப்படும் என்று சில விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

உத்தரகாண்ட் மாநிலம் பாட்நகர் பகுதியில் விவசாயிகள் “கிஷான் கிசானி அபியான ்'' என்ற பெயரில் அமைப்பை ஏற்படுத்தி உள்ளனர். இதன் தலைவர் ஹனீப் காந்தி என்பவர், மாநில அரசு மேலும் நிலம் வழங்கினால், இதை எதிர்த்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து டாடா மோட்டார் செய்தி தொடர்பாளர் கூறுகையில், எங்கள் தொழிற்சாலை அமைந்துள்ள எல்லா இடமும், அரசுக்கு சொந்தமான நிலம். உத்தரகாண்ட் மாநில அரசு 1,100 ஏக்கர் நிலம் வழங்குவதாக உறுதி அளித்துள்ளது. இதில் ஏற்கனவே வழங்கியுள்ள ஆயிரம் ஏக்கரில் வாகன தயாரிப்பு தொழிற்சாலையும், உதிரி பாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளும் அமைந்துள்ளன. ஊழியர்களின் குடியிருப்புகள் அமைப்பதற்காக 100 ஏக்கர் நிலம் வழங்க வேண்டியுள்ளது.

இங்கு ஏஸ் ரக வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த தொழிற்சாலைக்கான இடம் விவசாயிகளிடம் இருந்து பெறப்படவில்லை. எனவே போராட்டம் நடத்துவதற்கு அவசியம் ஏற்படவில்லை என்று கூறினார்.

மேற்கு வங்கத்தில் இருந்து, உத்தரகாண்ட் மாநிலத்திற்கு நானோ கார் தொழிற்சாலை மாற்றப்படுமா என்று கேட்டதற்கு, ஏற்கனவே உள்ள எங்கள் வாகன தொழிற்சாலைகளில் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வோம் என்று அறிவித்திருப்பதாக பதிலளித்தார்.



எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments