Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரி உயர்வை குறைக்க வியாபாரிகள் வேண்டுகோள்!

Webdunia
சனி, 27 செப்டம்பர் 2008 (11:57 IST)
வணிகக் கட்டடங்களுக்கு சொத்து வரி உயர்வை திருத்தி அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

மதுரை மாநகராட்சி நிர்வாகத்தின் புதிய சொத்து வரி சீரமைப்ப ு, அனைத்துத் தரப்பு மக்களையும் பெரிய அளவில் பாதிப்படையச் செய்துள்ளது.

பெட்ரோலியப் பொருள்கள் விலை உயர்வ ு, மின் தட்டுப்பாட ு, அத்தியாவசியப் பொருள்கள் விலையேற்றம் என பல வகைகளிலும் இன்னல்கள் அடைந்துள்ள தமிழக மக்களின் சுமையை அதிகரிக்கும் வகையில் சொத்து வரி சீரமைப்பு அமையக்கூடாது என குறிப்பிட்டிருந்தோம்.

மாநகராட்சி கடைகள ், நிறுவனங்களுக்கு சொத்து வரி 150 விழுக்காடு உயர்த்தியுள்ளது. இது எந்தவிதத்திலும் நியாயமல்ல.

இந்த வரி உயர்வை பொறுப்பேற்கும் வணிக நிறுவனங்கள் விற்பனை செய்யும் பொருட்களின் விலை உயர்வு, பொதுமக்களின் நிதிப்பளுவை அதிகரிக்கும்.

எனவ ே, மக்களின் துன்பங்களை நீக்கும் வகையில் குடியிருப்புக் கட்டடங்களுக்கு 10 சதவீதம ், வணிகக் கட்டடங்களுக்கு 50 சதவீதம் என்ற அளவில் வரி உயர்வை திருத்தி அமைக்க வேண்டும் என தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்க கெளரவச் செயலாளர் பி.சுபாஷ் சந்திரபோஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.


எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் அந்த சார்? பதில் சொல்... சட்டசபை அருகே அதிமுக எம்.எல்.ஏக்கள் கோஷம்..!

வெளியேறியது ஏன்? நீக்கப்பட்ட விளக்கம் மீண்டும் வெளியீடு.. ராஜ்பவன் பதிவு வைரல்..

பேரவை நிகழ்வுகள் நேரலையை துண்டித்துவிட்ட ஸ்டாலின் மாடல் அரசு! அதிமுக கண்டனம்..!

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

Show comments