Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிதி துறை செயலராக அருண் ராமநாதன் நியமனம்!

Webdunia
புதன், 24 செப்டம்பர் 2008 (16:27 IST)
மத்திய நிதி துறை செயலராக அருண் ராமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த பதவியில் இருந்த டி.சுப்பாராவ், ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து தற்போது நிதிதுறை செயலராக அருண் ராமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரின் நியமனத்திற்கு நேற்று மத்திய அமைச்சரவையின் நியமன குழு ஒப்புதல் அளித்தது.

இவர் தற்போது நிதி அமைச்சகத்தில் நிதி சேவை பிரிவு செயலராக உள்ளார். இந்த பதவியையும் தொடர்ந்து வகிப்பார்.

அருண் ராமநாதன் (59) இந்திய ஆட்சிப் பணியின் 1973 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்தவர ். இவர் 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டார். அங்கு இரசாயனம் மற்றும் உரத்துறை செயலராக நியமிக்கப்பட்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments