Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராம்கோ சிஸ்டம்ஸ்-ஹிந்துஸ்தான் பல்கலை. ஒப்பந்தம்!

Webdunia
செவ்வாய், 23 செப்டம்பர் 2008 (16:08 IST)
முன்னணி மென்பொருள் மற்றும் சேவை வழங்கும் நிறுவனமான ராம்கோ சிஸ்டம்ஸ், வான்வழி போக்குவரத்து பொறியியல் துறைக்கு புகழ் பெற்ற ஹிந்துஸ்தான் பல்கலைக்கழக (Hindustan University) கல்வி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் படி சென்னையில் உள்ள ஹிந்துஸ்தான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி அன்ட் சயன்ஸ் (HITS) மாணவர்களுக்கு மென்பொருள், மேலாண்மை உள்ளிட்ட தொழிற்துறை பயிற்சிகளை வழங்க இந்த ஒப்பந்தம் வழி வகை செய்கிறது. குறிப்பாக ராம்கோ நிறுவனத்தின் வான்வழி போக்குவரத்துத் துறை சார்ந்த எம்.ஆர்.ஓ. [ Maintenance Repair & Overhaul (MRO)] மென்பொருள் பயிற்சித் திட்டத்தில் இந்த ஒப்பந்தம் கவனக்குவிப்பு பெறுகிறது.

கார்ப்பரேட் உலகின் உயர் தொழில் நுட்ப தேவைகளுக்கு மாணவர்களை தயார் செய்யும் நோக்கத்துடன் ஒரு பரஸ்பர உதவிக்கான ஒப்பந்தம் என்றும் இதனைக் கருதலாம்.

விமான பொறியியல் மட்டுமின்றி மெக்கானிக்கல் பொறியியல் துறை மற்றும் நிர்வாக படிப்பு மாணவர்களுக்கும் அந்த துறை சார்ந்த அறிவுத் தகவல்களை வழங்குகிறது ராம்கோ சிஸ்டம்ஸ்.

ராம்கோ சிஸ்டம்ஸ் நீண்ட நாட்களாக விமான பராமரிப்பு, பழுது, மற்றும் ஒட்டுமொத்த செப்பனிடுதல் (எம்.ஆர்.ஓ) ஆகியவற்றிற்கான மென்பொருட்களை தயாரித்து வழங்குகி வருகிறது.

வர்ஜின் அமெரிக்கா, பின்னக்கிள் ஏர்லைன்ஸ், கரீபியன் ஏர்லைன்ஸ், ஏரோ மெக்சிகோ கனெக்ட், இந்தியன் ஏர்லைன்ச் உள்ளிட்ட பிரபல விமான போக்குவரத்து நிறுவனங்கள் ராம்கோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் மதிப்பு மிக்க வாடிக்கையாளர்கள் ஆவர்.

ஹிந்துஸ்தான் பல்கலைக் கழகம் சென்னையில் 1966ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

Show comments