Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குறு, சிறு தொழில் நிறுவனங்களின் கண்காணிப்புக் குழுக் கூட்டம்!

Webdunia
செவ்வாய், 23 செப்டம்பர் 2008 (11:55 IST)
தமிழகத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கண்காணிப்பு குழு கூட்டம் வருகின்ற வியாழக்கிழமை நடைபெற உள்ளது.

இந்த கூட்டம் ஊரகத் தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் நா. பழனிச்சாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெறும்.

தமிழ்நாட்டில் குற ு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கென தனிக் கொள்கை 2008ஆம் வருடம் முதல்வர் கருணாநிதியால் அறிமுகப்படுத்தப்பட்ட ு, செயல்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த தொழில் கொள்கையில் திட்டங்களின் செயல்பாடுகளைக ்
கண்காணிப்பதற்காக ஊரகத் தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் நா. பழனிச்சாமி தலைமையில் குற ு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை செயலாளர ், தொழில் துற ை, நிதித்துறை மற்றும் வணிக வரித் துறை செயலர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள ், வணிக வரித் துறை ஆணையர ், சிட்கோ நிறுவனம ், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் ஆகியவற்றின் மேலாண் இயக்குநர்கள ், தமிழ்நாடு மின்வாரியத்தின் (பகிர்மானம்) பிரதிநிதி ஆகியோரை உறுப்பினர்களாகவும ், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிகத் துறை இயக்குநர்களை அமைப்பாளராகவும் கொண்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் கொள்கைத் திட்டத்தில் முதலீட்டு மானியங்கள ், மின்மானியங்கள ், பின்முனை வட்டி மானியங்கள ், முத்திரைத்தாள் கட்டண சலுகைகள் போன்ற பல்வேற ு
சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசு அண்மையில ், முதலீட்டு மானியமாக ரூ.15
கோடியை, தொழில் முனைவோர்களுக்கு வழங்குவதற்கா க
விடுவித்துள்ளது.

இந்தக் கண்காணிப்புக் குழ ு, தொழிற் பேட்டைகளில் மின்சாரம ், குடிநீர ், மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள ஒற்றைச் சாளரக் குழுவின் செயல்பாடுகள ், தொழில் முனைவோர்களின் வசதியாக்க மன்றங்கள் மற்றும் தனிக்கொள்கையில ்
அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் போன்றவற்றை கண்காணித்து தகுந்த அறிவுரை வழங்கும்.

ஊரகத் தொழில் துறை அமைச்சர் திரு பொங்கலூர் நா. பழனிச்சாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காணிப்புக் குழுவின் முதல் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் வருகின்ற 25ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் குற ு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொழில் கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்புகள் தொடர்பாக செயல்படுத்தப்பட்டுள் ள
திட்டங்களையும ், பயன்களையும ், கருத்துகளும் ஆய்வு செய்யப்பட உள்ளன.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

Show comments