Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறப்பு பொருளாதார மண்டலம்-விவசாயிகளிடம் வாக்கெடுப்பு!

Webdunia
திங்கள், 22 செப்டம்பர் 2008 (12:48 IST)
சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்கு, விவசாயிகள் நிலத்தை வழங்க சம்மதிக்கின்றார்களா அல்லது எதிர்ப்பு தெரிவிக்கின்றார்களா என்பதை அறிய வாக்கெடுப்பு நடக்கிறது.

முகேஷ் அம்பானியின் தலைமையிலான ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் நிறுவனம் மகாராஷ்டிராவில் கொங்கன் பகுதியில் சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைக்க உள்ளது.

இந்த சிறப்பு பொருளாதார மண்டலம் 10 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு சுமார் ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட உள்ளது.

இந்த சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதால், ராஜ்காட் மாவட்டத்தில் உள்ள 22 கிராமங்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.

இந்த சிறப்பு பொருளாதாரம் மண்டலம் அமைக்க, விவசாயிகள் தங்களின் விளை நிலத்தை கொடுக்க சம்மதிக்கின்றார்களா அல்லது எதிர்ப்பு தெரிவிக்கின்றார்களா என்று ரெபரண்டம் ( referendum ) என்று அழைக்கப்படும் “ விருப்பத்தை தெரிவிக்கும் வாக்கெடுப்ப ு” இன்று நடைபெறுகிறது.

இந்த வாக்கெடுப்பு 22 கிராமங்களிலும் உள்ள தொடக்க பள்ளிகளில் நடக்கும். இந்த நடைமுறை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும்.

இந்நிலையில் இந்த கிராமத்தைச் சேர்ந்த சில விவசாயிகள், தங்களின் விருப்ப வாக்கெடுப்பு சீட்டில் அரசின் முத்திரை இல்லாமல் இருப்பதாக புகார் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக நேற்று ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் சேர்மன் முகேஷ் அம்பானி, செய்தியாளர்களிடம் பேசுகையில், சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க, விவசாயிகள் தங்கள் விளை நிலத்தை கொடுக்க சம்மதிக்கின்றார்களா, இல்லையா என்று விருப்பத்தை தெரிவிக்கும் வாக்கெடுப்பு நடத்துவதை வரவேற்பதாகவும், நாங்கள் மக்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளோம் என்று தெரிவித்தார்.

இங்கு சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க ரிலையன்ஸ் நிறுவனம், முன்பே விவசாயிகளிடம் இருந்து நிலத்தை வாங்க ஆரம்பித்தது.

இதற்கு பி.டபிள்யு.பி தலைவரும், பிரபல விவசாய சங்க தலைவருமான என்.டி.படீல் கடும் எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகளிடம் இருந்து நிலத்தை கைப்பற்றுவதை எதிர்த்து போராட்டம் நடத்தினார்.

இந்த எதிர்ப்பால் மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக், ஜீலை மாதம் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காக விளைநிலங்களை கையக்கபடுத்துவதை நிறுத்துவதாக அறிவித்தார்

அத்துடன் அரசு 22 கிராமங்களிலும் உள்ள விவசாயிகளிடமும், விருப்பத்தை தெரிவிக்கும் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று, போராட்டம் நடத்திய என்.டீ. படீல் இடம் உறுதியளித்தார்.

இந்த வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments