Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரக்கு கையாள்வதில் தூத்துக்குடி துறைமுகம் சாதனை!

Webdunia
புதன், 17 செப்டம்பர் 2008 (11:59 IST)
தூத்துக்குடி துறைமுகம் 100 லட்சம் டன் சரக்குகளை கையாண்டு சாதனை படைத்துள்ளது.

தூத்துக்குடி துறைமுகத்தில் 1.4.2008 முதல் 13.9.2008 வரை 100 லட்சம் (10 மில்லியன்) டன் சரக்குகள் ஏற்றி, இறக்கப்பட்டுள்ளன.

முந்தைய ஆண்டில் இதே காலகட்டத்தில் 89.95 லட்சம் டன் சரக்கு கையாண்டது. இதனுடன் ஒப்பிடும் போது 12.08 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது.

மத்திய அரச ு 2008-09 ஆம் ஆண்டிற்கு 240.60 லட்சம் சரக்கு கையாள வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கையும் கடந்து அதிக அளவு சரக்குகள் கையாள முடியும் என்று உறுதியாக நம்புகின்றோம்.

தூத்துக்குடி துறைமும் சாதனை அளவை எட்டியுள்ளதற்கு முக்கிய காரணம் ஆழ்த் துறைமுகத்தில் கையாளப்பட்ட நிலக்கரியாலும ், அதிகளவில் கையாளப்பட்ட சரக்குகளான தாமிரத் தாத ு, உரம் மற்றும் உரத்தின் கச்சா பொருள்களாலும ், சரக்குப் பெட்டகங்கள் மூலம் கையாளப்பட்ட சரக்குகளாலும் நிகழ்ந்துள்ளது.

இந்த சாதனை துறைமுக வாடிக்கையாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள ், அலுவலர்கள ், பணியாளர்கள் மற்றும் தூத்துக்குடி துறைமுக சரக்கு கையாளும் குழுமத்தின் அதிகாரிகள ், தொழிலாளர்களின் கூட்டு முயற்சியால் நிகழ்ந்துள்ளது.

இந்த சாதனை புரிவதற்கு காரணமாக இருந்த ஒவ்வொருவரையும ், தூத்துக்குடி துறைமுகம் பாராட்டுகிறது.

மேலும ், மத்திய அரசு நிர்ணயித்த இலக்கை கடப்பதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு தந்து உதவி புரிய வேண்டும் துறைமுக சபைத் தலைவர் கு.ஜெ. ராவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments