Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காப்பீடு துறையில் அந்நிய முதலீடுக்கு எதிர்ப்பு!

Webdunia
செவ்வாய், 16 செப்டம்பர் 2008 (15:16 IST)
காப்பீடு நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பதற்கு, அந்தத் துறையின் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பொது காப்பீடு நிறுவனத்தின் மதுரை மண்டல ஊழியர் சங்கம், காப்பீடு துறையில் அந்நிய நேரடி முதலீடு 26 விழுக்காட்டில் இருந்து 49 விழுக்காடாக உயர்த்த அனுமதிக்கும் முடிவைக் கைவிடுமாறு மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக இந்த ஊழியர் சங்கத்தின் திருச்சி மாவட்டக் குழு செயலாளர் ஜமுனா ராணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவத ு:

காப்பீடு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 26 விழுக்காட்டில் இருந்து, 49 விழுக்காடாக உயர்த்துவதை கைவிட வேண்டும்.

நியு இந்தியா அஷ்யூரன்ஸ். நேஷனல் இன்ஷ்யூரன்ஸ், ஓரியண்டல் இன்ஷ்யூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்ஷ்யூரன்ஸ் ஆகிய நான்கு பொது காப்பீடு நிறுவனங்களையும் மத்திய அரசு ஒன்றாக இணைக்க வேண்டும்.

பதவி உயர்வை எவ்வித தாமதமும் இன்றி அமல்படுத்த வேண்டும். வாரிசுகளுக்கு வேலை வழங்குவதற்கு உள்ள தடையை நீக்க வேண்டும்.

விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ், ஓய்வு பெற்றதால் ஏற்பட்டுள்ள காலி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.



எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

Show comments