இந்தியன் சில்லரை வணிக சங்க புதிய தலைவ‌ர் - சுபிக்சா சுப்ரமணியன்!

Webdunia
சனி, 13 செப்டம்பர் 2008 (14:31 IST)
இந்திய சில்லரை வணிக சங்க தலைவராக, சுபிக்சா மேலாண்மை இயக்குநர் ஆர்.சுப்ரமணியன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சூப்பர் மார்க்கெட்டுகள், சில்லரை வணிகத்தில் ஈடுபட்டுள்ள பெரிய நிறுவனங்களின் அமைப்பு இந்தியன் ரீடெய்ல் சங்கம் [ Indian Retail Forum (IRF)]

இந்த அமைப்பில் இந்த தொழிலில் முன்னணியில் உள்ள 250 பேர் உறுப்பினராக உள்ளனர்.

இந்த சங்கத்தின் புதிய தலைவராக சுபிக்சா மேலாண்மை இயக்குநர் ஆர்.சுப்ரமணியன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த புதிய பொறுப்பு குறித்து சுப்ரமணியன் கூறுகையில், இந்த சங்கத்தின் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் எனக்கு உண்மையிலேயே கவுரம் கிடைத்துள்ளது.

இந்திய சில்லரை வணிகத் துறை, உலக அளவில் சிறந்த முறையில் இயங்கும் துறைகளில் ஒன்றாக, இந்திய சில்லரை வணிக நிறுவனங்கள் உயர முயற்சிகள் மேற்கொள்வேன் என்று கூறினார்.

இப்போது தலைவராக உள்ள வி.வைத்தியநாதன் பேசுகையில், சுப்பிரமணியன் தனது சிறந்த எதிர்கால திட்டங்களாலும், தலைமை பண்பாலும், இந்த அமைப்பை மேலும் முன்னேற்றம் அடைய செய்வார் என்பதில் நம்பிக்கை உள்ளது. இதற்கு பொருளாதார வளர்ச்சி மந்தமான நிலையில் இருந்தாலும் கூட, சுபிக்சாவின் வளர்ச்சியே சிறந்த எடுத்துக் காட்டாக உள்ளது என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்டர் செய்த நோக்கியா போன் 16 வருஷம் கழிச்சி டெலிவரி!... சுவாரஸ்ய தகவல்!...

நீயா நானா பாத்துக்கலாம்!.. டிரம்பின் போன் காலை எடுக்காமல் தவிர்க்கும் மோடி!...

புதினை தூக்கும் பிளான் இப்போது இல்லை!.. டொனால்ட் டிரம்ப் நக்கல்!....

வேணாம்!. எங்ககிட்ட வச்சிக்காதீங்க!.. தென் கொரியாவை எச்சரித்த வடகொரியா அதிபர்!...

அமெரிக்கா உள்ளே வந்தால் சுடுவோம்.. அப்புறம்தான் பேசுவோம்!.. டென்மார்க் எச்சரிக்கை!...

Show comments