Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 லட்சம் டன் நெல் இருப்பு - சரத் பவார்!

Webdunia
வெள்ளி, 12 செப்டம்பர் 2008 (18:21 IST)
மத்திய அரசு இருபது லட்சம் டன் நெல் இருப்பில் வைத்துக் கொள்ள இருப்பதாக மத்திய வேளான் அமைச்சர் சரத் பவார் தெரிவித்தார்.

புதுடெல்லியில் இன்று வேர்ஹவுசிங்-2008 என்ற கருத்தரங்கில் சரத் பவார் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது.

மத்திய அரசு அவசர தேவைக்காக ஏற்கனவே 30 லட்சம் டன் கோதுமையை இருப்பில் வைத்துள்ளது.

இதே போல் 20 லட்சம் டன் நெல் இருப்பில் வைக்க திட்டமிட்டுள்ளது.

இந்த வருடம் அரசு நிறுவனங்கள் 225 லட்சம் டன் கோதுமையை கொள்முதல் செய்துள்ளன. இது சென்ற வருடம் கொள்முதல் செய்த அளவை விட இரண்டு மடங்கிற்கும் அதிகமாகும்.

இந்த வருடம் 274 டன் நெல் கொள்முதல் செய்துள்ளன. (சென்ற வருடம் சுமார் 249 லட்சம் டன்).

உணவு தானிய உற்பத்தி அதிகரிப்பதற்கு அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இவற்றை கொள்முதல் செய்து. இருப்பில் வைப்பதன் மூலம் உணவு தானியங்கள் தாராளமாக கிடைக்கும். இதன் விலைகளும் அதிகரிக்காது என்று அவர் கூறினார்.

மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றியுள்ள கிடங்கு வசதி சட்டத்தை ( Warehousing Ac t) பற்றி குறிப்பிட்டு பேசுகையில், இதனால் விவசாயிகள் உணவு தானியங்களை அவசரப்பட்டு குறைந்த விலைக்கு விற்காமல்,கிடங்குகளில் இருப்பில் வைத்துக் கொள்ள முடியும்.

கிடங்கிகளில் இருப்பு வைத்து. அதற்கான ரசீதுகளை காண்பித்து நிதி உதவி பெற முடியும். கிடங்கு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் ( Warehousing Development & Regulatory Authority ) அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கிடங்கு துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று கூறினார்.

இந்த கருத்தரங்கில் உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணை அமைச்சர் அகிலேஷ் பிரசாத் சிங்கும் உரையாற்றினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments